Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்-mhc notice for vanangan title issue radhika selfie with virat kohli and more kollywood top cinema news today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2024 10:10 PM IST

Top Cinema News Today: அஜித்தின் புதிய சொகுசு கார், வணங்கான் தலைப்பு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: வணங்கான் தலைப்பு நீதிமன்றம் நோட்டீஸ், விராட் கோலியுடன் ராதிகா செஃல்பி..இன்றைய டாப் சினிமா செய்திகள்

தலைவெட்டியான் பாளையம் வெப் சீரிஸ் ட்ரெய்லர்

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்' வெப் தொடரின் தமிழ் ரீமேக்கான 'தலைவெட்டியான் பாளையம்' செப்டம்பர் 20-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மர்மதேசம் புகழ் நாகா இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். இதையடுத்து இந்த சீரிஸின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா எக்ஸ் பக்கம் ஹேக்கிங்

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாராவின் எக்ஸ் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எனவே தனது பக்கத்தில் இருந்து தேவையில்லாத பதிவுகளை ரசிகர்கள் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. எதாவது புதியதாக பதிவுகள் தென்பட்டிருந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டாம்" என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

சதீஷின் சட்டம் என் கையில் டீசர் வெளியீடு

காமெடி நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். சம்பதா நாயகியாக நடித்துள்ளார். அஜய் ராஜ், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா உள்பட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார்

விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார் அவருடன் இணைந்து செஃல்பி புகைப்படத்தை எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார்" என தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வணங்கான் தலைப்பு விஷயத்தில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் பாலா இயக்கியிருக்கும் படம் வணங்கான். இந்த படத்தின் தலைப்பு தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்ப்பு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தென்னிந்திய சினிமா மற்றும் டிவி தயாரிப்பாளர்களு கில்டுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து சொகுசு கார் வாங்கிய அஜித்

ரூ. 3.5 கோடியில் போர்ஸ் புதிய சொகுசு கார் வாங்கியுள்ளார். கார் அருகே அஜித் இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில் ரெட் ஃபெராரி சொகுசு காரை வாங்கிய அவர் தற்போது மற்றொரு ரேஸ் காராக போர்ஸ் வாங்கியுள்ளார்.

வெளியான தளபதி 69 அப்டேட்

விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 குறித்தான அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அந்தப்படத்தை தயாரிக்கும் கன்னட திரைப்பட நிறுவனமான கே.வி. என் நிறுவனம், தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. அதன்படி தற்போது படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட்டில் விஜய்யின் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 குறித்து ரசிகர்கள் பேசுகின்றனர். தொடர்ந்து இறுதியில் தளபதி 69 படக்குழு தொடர்பான விபரங்களை நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரோகிணி போலீசில் புகார்

நடிகைகளை இழிவுபடுத்தும் பேச்சு, சினிமாவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை தரும் விதமாக பிரபல விமர்சகரான டாக்டர். காந்தராஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நடிகை ரோகிணி, இதுதொடர்பாக கிரிமினல் நடவடிக்கை தேவை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

தேவரா படத்தின் நான்கு காட்சிகள் கட்

கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைக்கும் காட்சியுடன், அதிகப்படியான வன்முறை காட்சி ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் தேவரா படத்தில் இடம்பிடித்துள்ளதால் சென்சாரில் நான்கு காட்சிகளுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. டத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் என இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.