Bala: “அப்படி போட்டு அந்த பொண்ண அடிச்சாரு உனக்கு தைரியம் இருந்தா அவ மேல கை வை” - பாலாவை வெளுத்த காஜல்!-actress kaajal latest interview about director bala worst behaviour in atharva vedhika paradesi movie set - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bala: “அப்படி போட்டு அந்த பொண்ண அடிச்சாரு உனக்கு தைரியம் இருந்தா அவ மேல கை வை” - பாலாவை வெளுத்த காஜல்!

Bala: “அப்படி போட்டு அந்த பொண்ண அடிச்சாரு உனக்கு தைரியம் இருந்தா அவ மேல கை வை” - பாலாவை வெளுத்த காஜல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 05, 2024 05:00 AM IST

Bala: அந்த படத்தில் வேதிகா ஒருவரை அடிப்பது போன்ற காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அதனை செய்து காட்ட அந்த இயக்குநர் கதாநாயகியை சுற்றி இருக்கும் ஒரு பெண்ணை அழைத்து எப்படி அடிக்க வேண்டும் என்பதை பயங்கரமாக அடித்து சொல்லிக்கொடுத்தார். -

Bala: “அப்படி போட்டு அந்த பொண்ண அடிச்சாரு உனக்கு தைரியம் இருந்தா அவ மேல கை வை” - பாலாவை வெளுத்த காஜல்!
Bala: “அப்படி போட்டு அந்த பொண்ண அடிச்சாரு உனக்கு தைரியம் இருந்தா அவ மேல கை வை” - பாலாவை வெளுத்த காஜல்!

சந்தோஷமாக இருக்கிறது

இது குறித்து அவர் பேசும் போது, “ இப்போது பாலியல் ரீதியான புகார்கள் முன்வந்து எடுக்கப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதை பார்க்கும் பொழுதே சந்தோஷமாக இருக்கிறது. முன்பெல்லாம் நாம் இப்படி கொடுக்கக்கூடிய புகார்கள் அனைத்தும் வெறும் புகார்களாகவே சென்று விடும். ஆனால், இம்முறை அப்படி இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்படுவது திரைத்துறையில் தவறு செய்பவர்களின் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது.

பாலா
பாலா

இந்த விவகாரத்தில் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் இயக்குநர்களை கடவுள் போல பாவிப்பார்கள். நேராக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் அவர்கள், இயக்குநர்களின் காலில் சென்று விழுவார்கள். அதுபோன்ற தற்குறி பெண்களெல்லாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. பரதேசி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நான் சென்றிருந்தேன். அப்போது அங்கு இயக்குநர் பாலா ஒரு விஷயம் செய்தார். அந்த விஷயத்தில் எது எனக்கு பிடிக்கவில்லை என்பதை நான் இங்கே சொல்கிறேன்.

பாலா செய்த மோசமான விஷயம்

அந்த படத்தில் வேதிகா ஒருவரை அடிப்பது போன்ற காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அதனை செய்து காட்ட அந்த இயக்குநர் கதாநாயகியை சுற்றி இருக்கும் ஒரு பெண்ணை அழைத்து எப்படி அடிக்க வேண்டும் என்பதை பயங்கரமாக அடித்து சொல்லிக்கொடுத்தார். உனக்கு தைரியம் இருந்தால் நீ கதாநாயகியிடமே அதை செய்து காட்ட வேண்டியதுதானே..

 

படப்பிடிப்பில் பாலா
படப்பிடிப்பில் பாலா

அதை பார்க்கும் பொழுது எனக்கு மிக மிக கஷ்டமாக இருந்தது. இதே போல எனக்கு செய்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு வாயைத் திறந்து இருப்பேன். ஆனால், அந்தப் பெண்ணுக்கு நடக்கும் பொழுது, என்னால் கேட்க முடியவில்லை. பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிந்தது. அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கோ படத்தில் நடந்த சம்பவம்

கோ படத்தில் நான் செத்து கீழே கிடப்பது போன்ற சீன். ராத்திரி பகலாக ஷூட்டிங் சென்று கொண்டிருந்தது. அதனால் சுத்தமாக தூக்கமே இல்லை. கிடைக்கக்கூடிய சிறிதளவு கேப்பில் தான் சென்று தூங்கிவிட்டு வர முடியும். ஆனால், நீ துணை கதாபாத்திரத்தில் தானே நடிக்கிறாய். அப்படி என்ன உனக்கு தூக்கம் என்ற ரீதியில் கேள்வி வரும்.

காஜல்
காஜல்

அதனால் நான் அதிலேயே கிடந்தேன். எனதருகில் ஜீவாவும், அஜ்மலும் சண்டைப்போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இடுப்பளவிற்குதான் ஷாட் இருந்தது. ஆனாலும், என்னை பிணமாக படுக்க வைத்திருந்தார்கள். உண்மையில் நான் அங்கு தேவையே இல்லை. அவர்கள் என்னை மிதித்து, மிதித்து சண்டைப்போட்டுக்கொண்டிருந்தார்கள். உடனே நான் அதிலிருந்து எழுந்து, இதை நீங்கள் டம்மி வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எனது முகம் தெரியும் பொழுது சொல்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டேன். அப்படி நாம் சொல்லிவிட்டால் நாம் திமிரு பிடித்தவன் என்று அர்த்தமாகிவிடும்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.