54 Years Of Adimai Penn: மறக்க முடியுமா? எம்ஜிஆருக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தந்த 'அடிமைப் பெண்'!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  54 Years Of Adimai Penn: மறக்க முடியுமா? எம்ஜிஆருக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தந்த 'அடிமைப் பெண்'!

54 Years Of Adimai Penn: மறக்க முடியுமா? எம்ஜிஆருக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தந்த 'அடிமைப் பெண்'!

Karthikeyan S HT Tamil
May 01, 2023 07:50 AM IST

54 Years Of Adimai Penn: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்த அடிமைப் பெண் திரைப்படம் 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளி வந்தது. இப்படம் குறித்த சில சுவாரஸ்யங்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோவிலேயே படமாக்கப்பட்டுவிடும், வெளிப்புற காட்சிகள் மிகக் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் அன்றைய காலகட்டத்தில் இருந்தது. தன் படங்களின் மீது ரசிகர்களின் எண்ணத்தை மாற்ற ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கினார் எம்.ஜி.ஆர்.

மன்னரான தன் தந்தையை கொன்று கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை மகன் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள தன் தாயை மீட்கும் கதை தான் 'அடிமைப் பெண்'. இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கருணாநிதியின் மைத்துனர் சொர்ணம் வசனத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இப்படத்தை இயக்கினார். இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடலை முதன் முதலாக எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை ஜெயலலிதா பாடி இருந்தார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப்பின் போது, எம்.ஜி.ஆருக்கு (புஷ் குல்லா) வெள்ளை குல்லா பரிசாக கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அதையே தனது அடையாளமாக மாற்றிக்கொண்டார் எம்.ஜி.ஆர். 'அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் வெள்ளை குல்லா அணிந்திருந்தார்.

அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட 'அடிமைப் பெண்' படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படமாக அசத்தியது. சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமும் இதுதான். இரட்டைவேடத்தில் நடித்து பெரும் வெற்றி பெற்ற 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் வசூல் சாதனையை 'அடிமைப் பெண்' முறியடித்து புதிய சாதனை படைத்தது.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் வெளியாகி (மே 1) இன்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மண்ணைவிட்டுப் பிரிந்தாலும் என்றும் மக்களின் மனதை விட்டுப் பிரியாத மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதற்கு ‘அடிமைப் பெண்’ திரைப்படமும் ஒரு சாட்சி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.