23 வயசுலேயே அப்பா அம்மா போயிட்டாங்க.. நடுவுல பொண்டாட்டியும்.. காலு விளங்காம போயிடுச்சு” -அரவிந்த் சாமி
அரவிந்த் சாமி தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை லிட்ட்ல் டாக்ஸ் யூடியூ சேனலுக்கு பேட்டிக்கொடுக்கும் போது 23 வயசுலேயே அப்பா அம்மா போயிட்டாங்க என்று பேசி இருக்கிறார்.
வாழ்க்கையில் தான் என்ன மாதிரியான கஷ்டங்களை சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் அரவிந்த்சாமி லிட்டல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த 5 வருடம் முன்பு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியை பார்க்கலாம்.
கஷ்டம் எல்லோருக்கும் இருக்கிறது
இது குறித்து அவர் பேசும் போது, “ வாழ்க்கையில் எல்லோருக்கும் கஷ்டம் என்பது வந்தே தீரும். ஒருவர் பணக்காரராக இருந்தால், அவரைப் பார்த்து அவருக்கு என்ன?..அவரிடம் நிறைய பணம் இருக்கிறது. அவருக்கு கஷ்டமே வராது என்று நினைப்பார்கள்.
அவரிடம் பணம் இருந்தாலும், அவர்களுக்கும் இதர பிரச்சினைகள் என்பது நிச்சயமாக இருக்கும். பொதுவாக நம்மிடம் எது இல்லையோ, அதை பற்றியே நம் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும். அதை அடைவதற்கு முயற்சி செய்யும்.
அப்பா பெரிய பணக்காரர்தான்
என்னுடைய அப்பா பெரிய பணக்காரர்தான். ஆனால் நான் ஒரு பணக்கார வீட்டு பையன் என்ற உணர்வை எப்போதும் பெற்றதே கிடையாது. எனக்கும் இலக்கு என்பது இருந்தது. நான் அதை நோக்கி ஓட ஆரம்பித்தேன். என்னுடைய அப்பா ,அம்மா பணத்தின் அருமை எனக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, என்னை சாதரணமாக பேருந்தில் செல்ல வைத்தார்கள் .
ஒரு நாளைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டும் தான் செலவுக்கு தருவார்கள். அது எனக்கு பத்தாது என்பதினால்தான் நான் மாடலிங்கில் இறங்கினேன். அதுதான் என்னை சினிமா துறைக்கு அழைத்து வந்தது. என்னுடைய குழந்தைகளிடமும் அதே முறையை அப்ளை செய்தேன். சொல்லப்போனால் கொஞ்சம் அதிகமாகவே அப்ளை செய்து விட்டேன் என்று சொல்லலாம்.
அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை சொல்கிறேன். ஒருமுறை நாங்கள் கடைக்கு சென்று இருந்தோம். அங்கிருந்த கடையில் இருந்த ஒரு பொருளை என்னுடைய மகள் எடுத்து வந்தாள். பில் போடும் அருகில் வந்த பொழுது, அதன் விலையை பார்த்த அவள், அதனை அங்கேயேவைத்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி அங்கே வைத்துவிட்டு வந்தாள்.
அப்பா அம்மா இறந்து விட்டனர்
என்னுடைய 23 வது வயதில் என்னுடைய அப்பா, அம்மா இருவருமே இறந்து விட்டார்கள். அந்த வயதிலேயே நான் தனியாக்கப்பட்டு விட்டேன். அதன் பின்னர் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால், கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவானது ஆனால் இரண்டு குழந்தைகளையும் நானே வளர்க்கிறேன் என்று கூறி எடுத்து வந்து விட்டேன். அப்போது ஒரு குழந்தைக்கு மூன்று வயதும், இன்னொரு குழந்தைக்கு ஏழு வயது ஆகி இருந்தது. இது என்னுடைய வாழ்க்கையில் நடந்தது.
இது பிறருடைய வாழ்க்கையில் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அவர்களது வாழ்க்கையில் என்ன இல்லாமல் இருக்கிறதோ, அதை பற்றி யோசித்து கொண்டு இருப்பார்கள். இதற்கிடையே, என்னுடைய கால் விளங்காமல் சென்று விட்டது. இப்படி என்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தன.
உண்மையில் சொல்லப் போனால் இதுதான் ரியாலிட்டி. பிரச்சினைகளை சந்திக்கும் பொழுது இது ஏன் எனக்கு வந்திருக்கிறது என்று கேட்கக் கூடாது. இது எனக்கு வந்திருக்கிறது; இதை எப்படி சமாளிக்க போகிறேன் என்பதை பற்றி மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். இந்த சூழ்நிலையை தாண்டி நாம் எப்படி வரப்போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானது” என்று பேசினார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்