பிரபல நடிகரான அரவிந்த் சாமி அண்மையில் தொகுப்பாளர் கோபிநாத் சேனலுக்கு கொடுத்த பேட்டியானது சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், அவர் வாழ்க்கைப் பற்றியும், பணத்தை கையாள்வது குறித்தும், பிசினஸ் குறித்தான அவரது பார்வையையும் பகிர்ந்திருந்தார். அவை அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய கவனத்தை பெற்று இருக்கிறது. அவரும், கார்த்தியும் இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படமும் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், அவரின் பர்சனலான விஷயங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
By Kalyani Pandiyan S Sep 28, 2024
Hindustan Times Tamil
1970ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி சென்னையில் பிறந்த நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான பயோலஜிக்கல் தந்தை ‘மெட்டி ஒலி’ சீரியல் புகழ் நடிகர் டெல்லி குமார்தான். ஆம், அரவிந்த் சுவாமி பிறந்த போதே, தன்னுடைய சகோதரியும் பரதநாட்டியக் கலைஞருமான வசந்தாவிற்கு அவரை தத்துக்கொடுத்து விட்டார்.
இவரது கணவர் மறைந்த பிரபல தொழிலதிபரான வி.டி. சுவாமி எனப்படும் வெங்கட சுவாமி எஃகு ஏற்றுமதி தொழிலில் முன்னோடியாக இருந்தவர். சிறுவயதிலேயே டெல்லி குமாரை பிரிந்து வசந்தா வீட்டிற்கு அரவிந்த் சாமி சென்றதால், ஆரம்பம் காலம் தொட்டே அவர்களின் பிள்ளையாகவே வளர்ந்தார்
இந்த நிலையில், கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக டெல்லி குமார் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அரவிந்த் சாமி குறித்து பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியை இங்கே பார்க்கலாம்
இது குறித்து பேசும் போது, “ அரவிந்த்சாமி என்னுடைய மகன்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவரும், நானும் அப்பா மகனாக நடிக்கவில்லையே என்று கேட்கிறீர்கள்.
இந்த இடத்தில் நானும் அவரும் அப்பா, மகனாக ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வியைத் தவிர்த்து, நானும் அவரும் அந்த மாதிரி நடிக்கும் போது, அதில் அப்பாவிற்கான கதாபாத்திரம் அந்தளவு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர் பிறந்த உடனேயே அவரை நாங்கள் சகோதரிக்கு தத்தெடுத்து கொடுத்து விட்டோம். அவர் அவர்களின் குடும்பத்தோடு ஐக்கியமாகிவிட்டார். அதனால் எங்கள் வீட்டுக்கு அவர் வருவது போவது எல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் ஏதாவது குடும்ப நிகழ்வு என்றால் வந்து செல்வார் அவ்வளவு தான்.” என்று பேசினார்.
நயன்தாரா - தனுஷ் இடையேயான பிரச்சினையில், பார்வதி நயன்தாராவுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணத்தை அவர் தற்போது பேசி இருக்கிறார்.