Cho Ramaswamy : ‘ராஜகுரு என்று பிரதமர் மோடியால் வர்ணிக்கப்பட்ட அரசியல் சாணக்கியர் சோ ராமசாமி’ நினைவு தினம்
ராஜகுரு என்று பின்னாளில் பிரதமர் மோடியால் வர்ணிக்கப்ட்டார். ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என்றும் அறியப்பட்டார்.
தமிழ் திரைப்பட நடிகர் எழுத்தாளர் விமர்சகர் பத்திரிக்கையாளர் பேச்சாளர், அரசியல் ராஜதந்திரி என பன்முக தந்து கொண்ட சோ ராமசாமி நினைவு நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை திரும்பிப் பார்க்கலாம்.
பிறப்பு
சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன் ராஜம்மாள் தம்பதிக்கு 1934 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்தார் ராமசாமி. அவரை வீட்டில் செல்லமாக சோ என்று அழைத்தனர். ஆரம்பக் கல்வியை சென்னை பி எஸ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர் லயோலா கல்லூரியிலும். விவேகானந்தா கல்லூரியிலுல் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
சோவின் தாத்தா அருணாச்சலம் ஐயர் தந்தை ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது சித்தப்பா என அனைவரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வந்தனர். இதனால் தானும் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று விரும்பினார் சோ. இதை அடுத்து சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் சில காலம் பணியாற்றினார். ஆனால் கல்லூரியில் படித்த போதே அவருக்கு நாடகத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. நடிப்பு மட்டும் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும் நாட்டம் கொண்டார். சென்னை உயர்நீதி மன்றத்தில் 5 ஆண்டுகள் வரை வழக்கறிஞராக பணியாற்றிய சோ முன்னாள் மத்திய அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு சொந்தமான டிடிகே நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
நாடகம்
இந்நிலையில் கல்யாணி என்ற நாடகத்தில் முதல் முடியாக நடித்தார். இதையடுத்து பகீரதன் எழுதிய தேன் மொழியாள் நாடகத்தில் தனது செல்லப்பெயரான சோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த சோ என்ற பெயரே அவரது வாழ்நாழ் முழுவதும் நீடித்து விட்டது. இந்த நாடக வெற்றிக்கு பின் முழுநேர நாடக கலைஞராக தன் பாதையை மாற்றினார் சோ.
அவரது நாடகங்கள் சமூக விமர்சனங்கள், மற்றும் அரசியல் நய்யாண்டிகள் கலந்தே இருந்தது. இந்த நிலையில் சோவின் சம்பவாமி யுகே யுகே என்ற நாடகத்தை பக்தவச்சலம் அரசு தணிக்கைக்கு செய்ய முயற்சித்தது. அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
சோவின் சரஸ்வதி சபதம், முகமது பின் துக்ளக், ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ் உள்ளிட்ட நாடகங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னாளில் விவேகா பைன் ஆர்ஸ் கிளப் என்ற நிறுவனத்தை 1905ல் தொடங்கி பம்பரமாக செயல் பட ஆரம்பித்தார்.
திரை உலகம்
1963ல் வெளியான பார் மகளே பார் படத்தில் திரைத்துறையில் அறிமுகம் ஆனார் சோ. அன்று தொடங்கிய அவரது நடிப்பு குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பல பரிமாணங்களை கண்டது. 2005 வரை சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.
சோ ராமசாமி நடிப்போடு மட்டும் நின்று விடாமல் இந்திய அரசியலை மிக கூர்மையாக கவனித்தார். இதைத்தொடர்ந்து தனது நாடக பாணியிலேயே துக்ளக் என்ற அரசியல் இதழை தொடங்கினார். இந்திராகாந்தி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மூப்பனார் உள்ளிட்ட சமகால அரசியல் தலைவர்களை நேரடியாக தனது துக்ளக் இதழில் விமர்சித்தார்.
ராஜகுரு என்று பின்னாளில் பிரதமர் மோடியால் வர்ணிக்கப்ட்டார். ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என்றும் அறியப்பட்டார்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி எதிர்காலத்தில் "இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்ப்பார்" என்றும் அவர் முன்கூட்டியே கணித்தார். சிறப்பான நிர்வாகத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் சென்னையில் 2016 டிசம்பர் 7ம் தேதி இயற்கை எய்தினார்.
சோவின் மறைவிற்கு பின்னர் இலக்கியம், இதழியல் பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
அவரது நினைவு நாளாக இன்று அவர் குறித்த தகவல்களை பகிர்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் பெருமிதம் கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.