தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Happy Birthday To Megha The Playback Singer Who Sang The Songs Thuppakki Pennae And Stole My Heart

HBD Singer Megha: துப்பாக்கி பெண்ணே, ஸ்டோல் மை ஹார்ட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகி மேகாவுக்கு இன்று பிறந்தநாள்!

Marimuthu M HT Tamil
Mar 18, 2024 09:14 AM IST

HBD Singer Megha: பின்னணிப் பாடகி மேகா பிறந்த தினம் தொடர்பான சிறப்புக் கட்டுரையினைக் கீழே படிக்கலாம்.

பின்னணிப் பாடகி மேகா
பின்னணிப் பாடகி மேகா

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்தப் பின்னணிப் பாடகி மேகா?: கர்நாடக இசையமைப்பாளரான பாபநாசம் சிவனின் கொள்ளுப்பேத்தி, மேகா. 1988ஆம் ஆண்டு, மார்ச் 18ஆம் தேதி சென்னையில் பிறந்த ஹரிணி ராமச்சந்திரன் என்ற மேகா, பெங்களூருவில் பள்ளிப் படிப்பையும், சென்னையில் வணிகவியலில் இளங்கலைப் பட்டப் படிப்பையும் முடித்தவர். அதன்பின், மனித வளத்துறையில் எம்.பி.ஏ முடித்த அவர் சென்னையைச் சார்ந்த அகஸ்டின் பால் என்பவரின் வழிகாட்டுதலின்பேரில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் 8ஆவது கிரேடு வரைப் படித்தார்.

பின்னணிப் பாடகி மேகாவின் திரைப்பயணம்: தற்போது தென்னிந்தியாவில் பிரபலப் பின்னணிப் பாடகியாக இருக்கும் மேகா, 2007ஆம் ஆண்டு, விஜய் ஆண்டனியின் இசையில் நான் அவன் இல்லை படத்தில் பாடகியாக அறிமுகப் படுத்தப்பட்டார். அப்படத்தில் 'நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு பாவம்' என்னும் பாடலையும், ‘காக்க.. காக்க’ என என்னும் பெப் ஏத்தும் தன் தனித்துவமான குரலில் பாடி, திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன்பின், காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் ‘தோழியாய் என் காதலியாய்’, மருதமலை திரைப்படத்தில் ‘ஏ.. மாமா.. ஏன் மாமா வர்றீயா’, வித்யாசாகர் இசையில் ‘துப்பாக்கி பெண்ணே’, தேவி ஸ்ரீபிரசாத் இசையில் சிங்கம் படத்தில் ‘ஸ்டோல் மை ஹார்ட்’, இரண்டாம் உலகம் படத்தில் ‘கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்’ போன்ற பல முக்கியப் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில், ‘ஏன் இதயம் உடைத்தாய் நெருங்கவே’ என்னும் பெண்ணின்குரலில் வரும் ஹம்மிங் தீம் மியூசிக், ஜெஸ்ஸி லேண்ட் எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த ஹம்மிங் குரலுக்குச் சொந்தக் காரர், பின்னணிப் பாடகி மேகா தான். இறுதியாக நித்தம் ஒரு வானம் படத்தில் ''யாரா வே யாரா வே''என்னும் பாடலைப் பாடியுள்ளார். இப்படத்தில் இவரது பெயர் மேகா ஹரிணி குறிப்பிடப்பட்டிருக்கும்.

தவிர மலையாளத்தில் இளம் இசையமைப்பாளர் சுசின் ஷியாம் இசையமைத்த ’டிரான்ஸ்’ திரைப்படத்தில் ’சாஞ்சா’ என்னும் பாடலையும், ''டோரன்மென்ட்''என்னும் மலையாளப் படத்தில் தீபக் தேவ் இசையில் ‘’நிலா நிலா’’என்னும் பாடலையும்; ‘’மனசில்’’ என்னும் பாடலையும் பாடியுள்ளார். அதேபோல், கன்னடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், உபேந்திரா நடித்த ‘காட் ஃபாதர்’ திரைப்படத்தில், ‘சரிகம சங்கமவே’ என்னும் பாடலைப் பாடியிருப்பார். அதே கன்னடத்தில் இளையராஜாவின் இசையில் ‘சுவல்பசவுண்டு’ என்னும் பாடலை சூரியகாந்தி என்னும் படத்துக்குப் பாடியிருப்பார், பின்னணிப் பாடகி மேகா.

அதேபோல், தெலுங்கில் தமனின் இசையில், ‘ரேஸ் குர்ரம்’ திரைப்படத்தில் ‘கல கல’ என்னும் பாடலும், தேவிஸ்ரீபிரசாத் இசையில் ‘ஆர்யா 2’ திரைப்படத்தில், ‘கரிகேலோக’என்னும் சூப்பர் ஹிட் பாடலையும் பாடினார். மேலும், தெலுங்கில் ’டோக்குடு’ திரைப்படத்தில், ‘அடரா அடரா’ என்னும் பாடலை ஸ்டைலாகப் பாடி அசத்தியிருப்பார். இதுதவிர, ஹாரிஸ் ஜெயராஜின் லைவ் கான்செர்ட்களில் அங்கம் வகிக்கும் பின்னணிப் பாடகிகளில் முக்கியவராகத் திகழ்ந்தார், மேகா.

IPL_Entry_Point

டாபிக்ஸ்