Shiva Rajkumar: ‘வீரப்பன் கடத்துனத நினைச்சு கூட பார்க்க விரும்பல.. 108 நாளும்..’ - திகில் சம்பவம் பகிர்ந்த சிவராஜ்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shiva Rajkumar: ‘வீரப்பன் கடத்துனத நினைச்சு கூட பார்க்க விரும்பல.. 108 நாளும்..’ - திகில் சம்பவம் பகிர்ந்த சிவராஜ்குமார்

Shiva Rajkumar: ‘வீரப்பன் கடத்துனத நினைச்சு கூட பார்க்க விரும்பல.. 108 நாளும்..’ - திகில் சம்பவம் பகிர்ந்த சிவராஜ்குமார்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 07, 2024 03:00 PM IST

அர்ஜூன், ரஜினி, முரளி என பலரும் குரல் கொடுத்தனர். நிறைய பிரபலங்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவருக்கு அப்போது மூட்டு பிரச்சினை உட்பட பல உடல்நலக்கோளாறுகள் இருந்தன.

சிவ ராஜ் குமார்
சிவ ராஜ் குமார்

கிட்டத்தட்ட 108 நாட்கள் காட்டிலேயே அவரை வைத்திருந்த வீரப்பன் அதன் பின்னர் அவரை விடுவித்தான். அந்த சமயத்தில் தான் கடந்த கஷ்டங்கள் குறித்து சிவராஜ்குமார் கலாட்டா சேனலுக்கு அண்மையில் பேசினார்.

அவர் பேசும் போது, “அப்பா பற்றி நினைத்துப் பார்க்காத நாளே கிடையாது. வீரப்பன் அப்பாவை கடத்தி வைத்த சம்பவத்தை நான் நினைத்துக்கூட பார்க்க விரும்பவில்லை. அந்த விஷயம் எங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அது கடினமாக இருந்தது. கன்னட திரையுலகமே முடங்கியது.

அர்ஜூன், ரஜினி, முரளி என பலரும் குரல் கொடுத்தனர். நிறைய பிரபலங்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவருக்கு அப்போது மூட்டு பிரச்சினை உட்பட பல உடல்நலக்கோளாறுகள் இருந்தன.

அவரால் காட்டுக்குள் அவ்வளவு தூரமெல்லாம் நடக்க முடியாது. அதுதான் எங்களுடைய கவலையாக இருந்தது. அவர் வெளியே வந்து வெட்டவெளியை பார்த்த போது, ஏதோ புதியதை பார்த்தது போல இருந்தார். காரணம், காட்டுக்குள் இருட்டு, பச்சை நிற மரங்கள் என உள்ளிட்டவற்றை மட்டுமே  அவர் பார்த்திருந்தார். யோகா செய்ததால் அவரால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.