“ உனக்கு அவனா?.. காதலுக்கு வீட்ல அவ்வளவு எதிர்ப்பு; நான் பண்ண பெரிய தப்பு;10 வருஷமா குழந்தை இல்லாம” -மந்த்ரா காதல் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ உனக்கு அவனா?.. காதலுக்கு வீட்ல அவ்வளவு எதிர்ப்பு; நான் பண்ண பெரிய தப்பு;10 வருஷமா குழந்தை இல்லாம” -மந்த்ரா காதல் கதை!

“ உனக்கு அவனா?.. காதலுக்கு வீட்ல அவ்வளவு எதிர்ப்பு; நான் பண்ண பெரிய தப்பு;10 வருஷமா குழந்தை இல்லாம” -மந்த்ரா காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 16, 2024 01:39 PM IST

நடிகை மந்த்ரா தன்னுடைய காதல் கதையையும், குழந்தைக்காக 10 வருடங்கள் காத்திருந்த கதையையும் பகிர்ந்து இருக்கிறார்.

“ உனக்கு அவனா?.. காதலுக்கு வீட்ல அவ்வளவு எதிர்ப்பு;  நான் பண்ண பெரிய தப்பு;10 வருஷமா குழந்தை இல்லாம” -மந்த்ரா காதல் கதை!
“ உனக்கு அவனா?.. காதலுக்கு வீட்ல அவ்வளவு எதிர்ப்பு; நான் பண்ண பெரிய தப்பு;10 வருஷமா குழந்தை இல்லாம” -மந்த்ரா காதல் கதை!

அசோசியேட் டைரக்டருடன் காதல்

தன்னுடைய கடைசி திரைப்படத்தில், அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீமுனியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் கிட்டத்தட்ட 7 வருடங்கள் சினிமா துறையில் இருந்து விலகி, தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய காதல் கதையை கலாட்டா சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டி இங்கே!

கணவருடன்
கணவருடன்

அவர் பேசும் போது, “என்னுடைய கேரியரில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நான் திருமணமே செய்து கொண்டேன். எனக்கு அப்போது 21 வயது. பொதுவாக ஹீரோயின்கள் எல்லோரும் 24 அல்லது 25 வயதில் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் நான் அதையெல்லாம் பார்க்கவே இல்லை.

வீட்டிலும் என்னை பெண் கேட்டு பலர் வந்தார்கள். ஒவ்வொரு கதாநாயகிக்கும் பீக் டைம் என்ற ஒன்று உண்டு. அந்த பீக் டைம் இறங்கிய உடன் அவர்கள் கெரியரை விட்டு விலகி விடுவார்கள். அதே போலதான் என்னுடைய மார்க்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குவதை என்னால் பார்க்க முடிந்தது. என்னுடைய அப்பா எப்போதுமே கெரியரின் பீக்கில் இருக்கும் போது, நீ சினிமாவை விட்டு வந்து விட வேண்டும். அப்போதுதான் நீ மக்கள் மனதில் நன்றாக நினைவிருப்பாய் என்பார்.

அடுத்தக்கட்டத்திற்குச் சென்ற உறவு

ஆகையால், அந்த எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என்னுடைய கடைசி திரைப்படத்தில்தான் என்னுடைய கணவரை நான் சந்தித்தேன். அவர் அந்தப்படத்தில் அசோசியேட் டைரக்டராக இருந்தார். இருவரும் பேசினோம். பழகினோம்.. நண்பர்கள் ஆனோம். நாளடைவில் உறவு அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்வதை என்னால் உணர முடிந்தது. இதனையடுத்து நான் என்னுடைய காதலை வீட்டில் சொன்னேன். ஆனால், அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. அவர்கள் டாப் ஹீரோயினியாக இருக்கும் உனக்கு அவர் கணவரா? இது இருவருக்குமே பிரச்சினையை உருவாக்கும் என்றனர்.

 

குழந்தையுடன் மந்தரா
குழந்தையுடன் மந்தரா

ஆனால் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருந்தேன். ஒரு கட்டத்தில், அவர்கள் சமாதானம் ஆகி கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். கல்யாணம் ஆகி 2, 3 வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்கள் குழந்தை பிறப்பை திட்டமிடாதீர்கள் என்பார்கள். அது என் விஷயத்தில் அப்படியே நடந்தது. அந்த 10 வருடங்களில் எனக்கு அவ்வளவு அனுபவம் கிடைத்தது. அது ஒரு பக்கம் இருந்தாலும், நான் சந்தோஷமாகத்தான் இருந்தேன். நானும் அவரும் நன்றாக ஊர் சுற்றுவோம். பிடித்ததை வாங்கி சாப்பிடுவோம்.. ஜாலியாக இருந்தோம்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.