பெரிய நடிகையாக இருந்தும் ஒரு காலத்தில் கெட்டுப்போன சாப்பாட்டை அள்ளி அள்ளி சாப்பிட்ட மனோரமா ஆச்சி!
எவ்வளவு பெரிய லெஜண்ட் ஆச்சி.. கெட்டுப்போன அந்த சாப்பாட்டை சாப்பிடுவது போல் நடிச்சா கூட பரவாயில்லை.. ஆனா அதை அள்ளி அள்ளி சாப்பிடுவாங்க. அது அவர் சிறந்த நடிகைக்குரிய அடையாளம் என்று சுந்தர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சினிமாவில் சில நேரங்களில் காட்சிகளின் ரியாலிட்டிக்காகவும் பெர்பெக்சனுக்காகவும் அதிக மெனக்கெடல்கள் தேவை இருக்கும். சின்ன சின்ன காட்சிகள் கூட நுணுக்கமான முறையில் திரையில் வெளியாக சில நேரங்களில் நடிகர் நடிகைகளின் அர்ப்பணிப்பும், உழைப்பும் மிக முக்கியம். அப்படியான ஒரு முக்கிய சம்பவம் குறித்து இங்கு பார்க்கலாம். ஆச்சி என்று எல்லோருக்கும் பரிட்சயமாகி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஆச்சி மனோரமா ஒரு படத்துக்காக கெட்டுப்போன சாப்பாட்டை சாப்பிட்ட சம்பவம் குறித்து இங்கு பார்க்கலாம். மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் 1998 ல் வெளியான படம் மறுமலர்ச்சி. இந்த படத்தில் தேவயானி, மம்முட்டி, ஆச்சி மனோரமா, ரஞ்சித், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது V K Sundar Updates யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
ஜமீன் வீட்டில் படப்பிடிப்பு
அதில், மறுமலர்ச்சி திரைப்படம் திருவண்ணமாமலைக்கு பக்கத்தில் வேட்டவலம் என்ற கிராமத்தில் ஜமீன் வீட்டில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு பல காட்சிகள் எடுக்கப்பட்டது. அதில் ஒரு காட்சியில் வீட்டில் மனோரமா இருக்கும் போது நடிகர் பாலா சிங் சாமியார் வேடம் போட்டு வருவார். பொதுவாக ராசுப்படையாச்சி வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு கொடுப்பது அந்த வீட்டின் பழக்கம் என்று காட்சி அமைப்பு இருக்கும். இந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மனோரமா ஆச்சி இலை போட்டு சாப்பாடு, காய்கறி, கூட்டு எல்லாம் வைப்பார். அப்போது ஆச்சி பார்க்காத நேரத்தில் பாலா சிங் அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து விடுவார்.