என்ன செஞ்சாலும் குத்தம்.. இப்போ இதுக்கெல்லாம் பழகிட்டேன்- ஆதங்கத்தில் பாலிவுட் நடிகை
எதிர்மறை விமர்சனங்கள் நம்மை தொந்தரவு செய்யாமல், அதனை எளிதாக கையாள்வது எப்படி என தற்போது அறிந்ததாக பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கூறியுள்ளார்.

பாலிவுட்டில் பேர் சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்திருந்தாலும், மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தைய தையா பாடலுக்கு நடனமாடி இந்த அளவில் பிரபலமானவர் தான் மலைக்கா அரோரா. தற்போது 50 வயதைக் கடந்த அவர், தன் வாழ்வில் ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததாகவும், தற்போது அதனை எவ்வாறு கையாள்வது என கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மலைக்கா அரோரா காதல், திருமணம், உறவுமுறை போன்ற விஷயங்களுக்காக அதிகளவிலான தாக்குதல்களை சோசியல் மீடியாவில் பெற்றுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அவர், குளோபல் ஸ்பா எனும் இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது பேசிய மலைக்கா தனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
விமர்சனங்களை இப்படித் தான் எதிர்கொள்கிறேன்
தனது உறவுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகள் குறித்த விமர்சனங்களை என்னால் முடிந்த அளவு கடந்து செல்கிறேன். சில சமயங்களில் இந்த விஷயங்கள் எல்லாம் என்னை பெரிதாகத் தொந்தரவு செய்யாது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் தொடர் விமர்சனங்கள் என்னை பாதிக்கின்றன.