தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vijay Sethupathi Katrina Kaif Merry Christmas Box Office Collection

Merry Christmas Box office: மும்முனை போட்டி.. நானும் களத்துல இருக்கேன்பா.. விஜய்சேதுபதி மேரி கிறிஸ்துமஸ் வசூல் என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 18, 2024 09:55 AM IST

தற்போது கத்ரீனா கைஃப் - உடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி!

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது கத்ரீனா கைஃப் - உடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 12ம் தேதி வெளியான இந்தப்படம், அன்றைய தினம் மட்டும் 2.45 கோடி வசூல் செய்தது. அடுத்த நாளில் 3.45 கோடியும், மூன்றாவது நாளில் 3.83 கோடியும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

கடந்த திங்கள் அன்று 1.65 கோடி வசூல் செய்த மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 1.3 கோடியும் வசூல் செய்திருக்கிறதாம். ஆக மொத்தமாக, ஐந்து நாட்களில் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 12.68 கோடி வசூல் செய்திருக்கிறதாம். ஆகையால் இந்த வாரம் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 15 கோடி வசூலை கடந்து விடும் என்று சொல்லப்படுகிறது. 

இந்தப்படம் தொடர்பாக விஜய்சேதுபதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஹிந்தி மொழி எதிர்ப்பு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “இந்த மாதிரியான கேள்வியை நீங்கள் அமீர்கான் சார் வந்த போதும் கேட்டீர்கள் இல்லையா? எல்லா சமயத்திலும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு என்ன ஆகப் போகிறது. முதலில் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று நாம் சொல்லவே இல்லை.

ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இங்கு நிறைய பேர் ஹிந்தி படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்க வில்லை. அதற்கான விளக்கம் அமைச்சர் பி.டி.ஆர் ஒரு இடத்தில் தெளிவாக கொடுத்து இருப்பார்கள். அதை சென்று பாருங்கள்” என்று பேசினார்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.