8 நாளுக்கு 25 கோடி.. தூண்டிலுக்கு சிக்காமல் தப்பிய உதயநிதி.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட கோர்டு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  8 நாளுக்கு 25 கோடி.. தூண்டிலுக்கு சிக்காமல் தப்பிய உதயநிதி.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட கோர்டு!

8 நாளுக்கு 25 கோடி.. தூண்டிலுக்கு சிக்காமல் தப்பிய உதயநிதி.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட கோர்டு!

Malavica Natarajan HT Tamil
Nov 20, 2024 01:47 PM IST

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் பங்கேற்காததால் 25 கோடி நஷ்டஈடு கேட்டு ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

8 நாளுக்கு 25 கோடி.. தூண்டிலுக்கு சிக்காமல் தப்பிய உதயநிதி.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட கோர்டு!
8 நாளுக்கு 25 கோடி.. தூண்டிலுக்கு சிக்காமல் தப்பிய உதயநிதி.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட கோர்டு!

8 நாள் கால்ஷீட் தராத உதயநிதி

மேலும், 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்துள்ளார். அந்த படமே தனது கடைசி படம் என கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

காலதாமத மனு

இதையடுத்து, இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனக்கெதிராக ராமசரவணன் காலதாமதமாக மனு தாக்கல் செய்துள்ளதால் அவர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காரமன், அமைச்சர் உதயநிதியின் மனுவை ஏற்றுக்கொண்டு, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கலைஞர்கள் பாதிப்பு

முன்னதாக நடந்த விசாரணையில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, "ஏஞ்சல் படத்துக்காக எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருகிறார். இதனால் இந்த படத்தின் உதவி இயக்குநர்கள் மற்றும் திரை கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஏஞ்சல் படம் தொடர்பாக தயாரிப்பாளரை, உதயநிதி ஸ்டாலின் பலமுறை தொடர்பு கொண்டார். படத்தில் தனக்கான காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதால் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும்" தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டீக்காராமன், "தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் உத்தரவை ஒத்தி வைத்தார்.

உதயநிதியின் ஏஞ்சல் படம்

திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வந்த ஏஞ்சல் படத்தில் உதயநிதி ஸ்டாலின், பாயல் ராஜ்புட், கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை கே.எஸ். அதியமான் இயக்கியுள்ளார். இவர் தமிழில் தொட்ட சிணுங்கி, பிரியசகி, தூண்டில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

ஏஞ்சல் படத்தில் சுமார் 40 நாள்களுக்கு மேலாக உதயநிதி நடித்து கொடுத்த நிலையில், 2019 தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்து, மாமன்னன் தான் தனது கடைசி படம் என தெரிவித்தார்.

ஏஞ்சல் படத்தை முடிக்காததன் பின்னணி

திகில் கலந்த கதையாக உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ஆன்மிகம், மூடநம்பிக்கை சார்ந்த சம்பவங்களும் காட்சிகளும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் அரசியல் ரீதியாக விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால் உதயநிதி படத்தின் எஞ்சிய காட்சிகளில் நடிக்க தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.