தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari : பஞ்சாயத்தை கூட்டிய சக்கரை.. கடைசியில் நடந்தது என்ன?

Maari : பஞ்சாயத்தை கூட்டிய சக்கரை.. கடைசியில் நடந்தது என்ன?

Divya Sekar HT Tamil
May 16, 2023 10:58 AM IST

மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

மாரி சீரியல்
மாரி சீரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து பேச்சி வீட்டுக்கு வந்த மாரி பூ எடுத்துக் கொடுத்து வரும்போது வழியில் நடந்த விஷயங்களை சொல்ல சண்முகமும் முத்துப்பேச்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

அதன் பிறகு முத்துப்பேச்சு இருவரையும் உட்கார வைத்து தனது கையால் பரிமாறிவிட்டு தான் பஞ்சாயத்துக்கு சென்று வருவதாக சொல்ல மாரியும் சூர்யாவும் நாங்களும் உங்களோடு வருகிறோம் என சொல்லி கிளம்புகின்றனர்.

கோவில் திறந்த விஷயம் சார்பாக சர்க்கரை கலெக்டர் தலைமையில் பஞ்சாயத்தை கூட்டி முத்து பேச்சி கூட்டு களவாணித்தனம் பண்ணி இருக்கா, அவ தான் ஆள வச்சு கோவிலை திறந்து இருக்கா என சத்தம் போட்டுக் கொண்டிருக்க அப்போது முத்துப்பேச்சி, மாரி மற்றும் சூர்யா என மூவரும் வந்து இறங்குகின்றனர்.

சக்கரை முத்துப்பேச்சியை அவமானப்படுத்தி பேச சூர்யா கோவில் பூட்டை நான் தான் உடைத்தேன் என சொல்ல மாரி நடந்த விஷயங்களை சொல்கிறாள். இவ சொல்வதெல்லாம் பொய் என சக்கரை பேசிக் கொண்டிருக்க அந்த சமயம் சக்கரையின் மனைவிக்கு சாமி வந்து நான் தான் கோவிலை திறக்க வைத்தேன், எனக்கு பூஜை பண்ணுங்க என சொல்ல ஊர் மக்கள் அனைவரும் சந்தோஷமடைகின்றனர்.

முத்துப்பேச்சு இதை யார் சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருக்க மாட்டேன் என்னை எதிர்த்து பேசியவரோட மனைவி மூலமாகவே சாமி வந்து சொல்லி இருக்கு என்று கலெக்டரிடம் எடுத்து பேசி கோவிலை எப்போதும் திறந்தே இருக்க வழி செய்கிறாள்.

பிறகு ஊர் மக்கள் எல்லோரும் முத்துபேச்சி வாழ்க என கோஷம் போட முத்து பேச்சி மாரிக்கு நன்றி சொல்கிறார். அது மட்டுமல்லாமல் நேராக பேச்சியம்மன் கோவிலுக்கு சென்று இனிமே உனக்கு மூன்று வேலையும் நான் பூஜை செய்வேன். மாரியும் சூர்யாவும் உன்னுடைய குழந்தைங்க, அவங்க எப்போதும் சந்தோஷமாக இருக்கணும் என வேண்டுகிறாள்.

பஞ்சாயத்தில் நடந்த விஷயங்களை பார்த்து சகுந்தலா மற்றும் ஸ்ரீஜா இருவரும் கடுப்பாகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்