Lollu Sabha Jeeva: ‘என்னோட ஷூட்டிங்கில் ‘சைட் டிஷ்’ வித் கிளாஸ் கட்டாயம்’ ஜீவா
Lollu Sabha Jeeva Speech: ‘மதுவை பூரணமாக ஒழிக்க முடியாது. அது மாதிரியான சூழல் வந்துவிட்டது’ -லொள்ளு சபா ஜீவா
லோக்கல் சரக்கு படத்தின் விழாவில் பங்கேற்ற நடிகர் லொள்ளு சபா’ ஜீவா, தனது படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதோ அவருடைய பேச்சு:
‘‘இமான் அண்ணாச்சியை பிடிக்காத ஆளே இருக்க மாட்டாங்க. சாம்ஸ் அண்ணே ஒரு படத்தில் இருக்கிறார் என்றால், அவர் அந்த படத்தில் ஸ்கிரிப்டுக்கு என்ன மெனக்கெடல் செய்ய வேண்டுமோ, அதை எல்லாமே செய்வார்.
இந்த படத்தின் இன்னொரு பலமாக யோகி பாபு இருக்கிறார். இவர்கள் எல்லாரும் இருப்பதால், படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. கண்டிப்பா, வியாபார ரீதியாக அவர் இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருப்பார். மற்றாருவர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் சுவாமிநாதன். இரு பணியை அவர் செய்திருப்பது பாராட்டக்கூடியாது.
சினிமாவில் நிறைய பார்டி சீன்ஸ், சரக்கு சீன்ஸ் நிறைய வந்துவிடுகிறது. நான் நடிச்ச படங்களிலேயே , ஏன், லொள்ளு சபாவில் கூட எங்களுடைய ‘செட் ப்ராப்பர்டி’ நாலு தண்ணி கிளாஸ், கொஞ்சம் மிக்சர் பாக்கெட் தான். அது இல்லாம ஷூட்டிங்கே இல்லை.
போனதுமே, ஷூட்டிங் ஸ்பாட்டில் நிரந்தரமா கிளாஸ், மிக்சர் வாங்கி வைத்து விடுவோம். அது இல்லாமல் சீன்ஸ் இருக்காது. கண்டிப்பா அந்த சீன் இருக்கும். அந்த மாதிரி தளமாக, அந்த மாதரி கதை களமாகவே அது அமைந்து வந்துவிடும்.
ஆரம்பம் அட்டகாசம் என்ற என்னுடைய முதல் படத்தில் நானும் சாம்ஸ் அண்ணனும் நடிக்கும் போது, அதிக சீன்கள் பாரில் தான் இருக்கும். படமா செய்யும் போது, அது போவது வேறு; அதே நேரத்தில் சமூக செயற்பாட்டாளராக நான் பயணிக்கும் போது, நிறைய பேர் என்னிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள்.
‘சார் சரக்கு மாதிரியான விசயங்களை கொஞ்சம் கம்மியா காட்டுங்க’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். அது எந்த அளவுக்கு தவிர்க்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால், முடிந்த அளவிற்கு அதை தவிர்க்க முயற்சிகள் செய்வோம்.
சரக்கு இல்லாமல் யாரும் வாழ முடியாது என்றில்லை. லாக்டவுன் நேரத்தில் அது கிடைக்கவில்லை; அதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம்,மது இல்லாமல் எல்லாராலும் இருக்க முடியும் என்பது உண்மை. அதை தவிர்க்க வேண்டியது அனைவரின் கடமை.
என்னுடைய ஒரே ஒரு கோரிக்கை, வியாபாரத்திற்காக படத்தின் பெயரை ‘லோக்கல் சரக்கு’ என்று வைத்துள்ளார்கள். மதுவை பூரணமாக ஒழிக்க முடியாது. காரணம், அது மாதிரியான சூழல் வந்துவிட்டது. ஆனால், கொஞ்சம் வரைமுறைப்படுத்தலாம் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் ஜீவா பேசியுள்ளார்.
டாபிக்ஸ்