Top Sid Sriram Songs : ஒன்ன நெனச்சு.. என்னடி மாயாவி நீ.. கண்ணான கண்ணே.. சித் ஸ்ரீ ராம் பாடிய டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்!-list of top hit trending songs by sid sri ram - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Sid Sriram Songs : ஒன்ன நெனச்சு.. என்னடி மாயாவி நீ.. கண்ணான கண்ணே.. சித் ஸ்ரீ ராம் பாடிய டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்!

Top Sid Sriram Songs : ஒன்ன நெனச்சு.. என்னடி மாயாவி நீ.. கண்ணான கண்ணே.. சித் ஸ்ரீ ராம் பாடிய டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்!

Divya Sekar HT Tamil
Sep 13, 2024 12:05 PM IST

Top Trending Sid Sriram Songs : அதிகமாக ரசிக்கப்பட்டு வரும் சித் ஸ்ரீ ராம் டாப் ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

Top Sid Sriram Songs : ஒன்ன நெனச்சு.. என்னடி மாயாவி நீ.. கண்ணான கண்ணே.. சித் ஸ்ரீ ராம் பாடிய டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்!
Top Sid Sriram Songs : ஒன்ன நெனச்சு.. என்னடி மாயாவி நீ.. கண்ணான கண்ணே.. சித் ஸ்ரீ ராம் பாடிய டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்!

அடியே - கடல்

இயக்குனர் மணி ரத்னம் இயக்கி, தயாரித்து வெளிவந்த திரைப்படம் கடல். தமிழின் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடப்பெற்ற அடியே பாடல் சித் ஸ்ரீ ராம் பாடி இருப்பார். இப்பாடல் செம ஹிட்.

என்னடி மாயாவி நீ - வட சென்னை

சந்தோஷ் நாராயணின் என்னடி மாயாவி நீ பாடலை சித் ஸ்ரீ ராம் பாடி இருப்பார். முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை ரத்தம் தெறிக்கத் தெறிக்க‌ சண்டை நிறைந்த 'வடசென்னை' படத்தில், இப்படி ஒரு மென்மையான பாடல் இடம்பெற்று இருக்கும். இப்படத்தில் முழுப் பாடல் படமாக்கப்படவில்லை.

விசிறி - எனை நோக்கி பாயும் தோட்டா

2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தை கௌதம் மேனன் எழுதி, இயக்கி, தயாரித்தார். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ம.சசிகுமார் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா. இப்படத்தில் இடம்பெற்ற எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்ற பாடலை தாமரை வரிகள் எழுத சித் ஸ்ரீ ராம் பாடி இருப்பார். இப்பாடலும் செம ஹிட் ஆனது.

கண்ணான கண்ணே - விஸ்வாசம்

இசையமைப்பாளர் டி. இமான் இசையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா சுரேந்திரன் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் டி. இமானுக்கு தேசிய விருதையே வாங்கி கொடுத்தது. மனதை மயக்கும் இப்பாடலை சித் ஸ்ரீ ராம் பாடி இருப்பார்.

தள்ளி போகாதே - அச்சம் யென்பது மடமையடா

2016ஆம் ஆண்டு வெளிவந்த காதல் மற்றும் அதிரடித் திரைப்படம் அச்சம் என்பது மடமையடா. கௌதம் மேனன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிலம்பரசன் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற தள்ளி போகாதே பாடலை சித் ஸ்ரீ ராம் பாடி இருப்பார்.

குறும்பா - டிக் டிக் டிக்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இப்படத்தை இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கிருந்தார். ஜெயம் ரவியின் மகனாக ஆரவ் ரவியே படத்திலும் அவரது மகனாக நடித்திருந்தார். டி.இமான் இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த குறும்பா பாடல் பெறும் வரவேற்பை பெற்றது. இப்பாடல் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடலாகும். இப்பாடலை சித் ஸ்ரீ ராம் தனது மாயா குரலால் பாடி இருப்பார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.