Gautham Karthik: ராஜூ முருகன் வசனத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக்.. பிறந்தநாளில் வெளியான சூப்பர் அப்டேட்
கௌதம் கார்த்திக் ' கிரிமினல் ' மற்றும் ' மிஸ்டர் எக்ஸ் ' என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம். ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, ' கடல் ' படத்தின் மூலம் நமக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், கௌதம் கார்த்திக். இவர் தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ' பத்து தல ' மற்றும் ' ஆகஸ்ட் 16, 1947 ' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
தற்போது கௌதம் கார்த்திக் ' கிரிமினல் ' மற்றும் ' மிஸ்டர் எக்ஸ் ' என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இந்த புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.