டாப் 10 சினிமா.. கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை.. தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை.. லப்பர் பந்து ஓடிடி ஒத்திவைப்பு!
Top 10 Cinema : லப்பர் பந்து படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைப்பு, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ராதிகா ஆப்தே என இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை பார்ப்போம்.

'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைப்பு
தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகிற 18ம் தேதி சிம்பிளி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருந்தது. இந்த நிலையில், இப்படம் இன்னும் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்று வருவதால் இதன் ஓ.டி.டி தேதியை ஒத்திவைப்பதாகவும் விரைவில் புதிய தேதியை அறிவிப்பதாகவும் சிம்பிளி சவுத் ஓ.டி.டி நிறுவனம் அறிவித்துள்ளது.
'கடைசி உலகப் போர்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த 'கடைசி உலகப் போர்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குனருமான ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஹிப் ஹாப் ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் நாசர், அழகன் பெருமாள், அனகா,ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற 25ம் தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரிவால்வர் ரீட்டா' டைட்டில் டீசர்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் டைட்டில் டீசரை நேற்று படக்குழு வெளியிட்டது.