தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Leo To Vikram Title Announcement That Created A Huge Buzz In Kollywood

Kaththi to Leo: ‘பத்த வச்சிட்டியே பரட்டை’..எதிர்பார்ப்பை எகிற வைத்த டைட்டில்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2023 12:31 PM IST

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டைட்டில்களை இங்கு பார்க்கலாம்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த டைட்டில்கள்
எதிர்பார்ப்பை எகிற வைத்த டைட்டில்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கத்தி 

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’; இந்தப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்ற நிலையில், விஜயும் ஏ.ஆர்.முருகதாஸூம் மீண்டும் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியானது; அந்த அறிவிப்பு வெளியானதும் மக்கள் மத்தியில் இந்தப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது; தொடர்ந்து படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில்தான், படத்தின் தலைப்பு ‘கத்தி’ என்று அறிவிக்கப்பட்டது.

தெறி,மெர்சல் 

இதே போல ‘தெறி’ படத்திற்கு பிறகு அட்லீயுடன் விஜய் இணைந்த ‘மெர்சல்’ ‘பிகில்’ ஆகிய படங்களுக்கும் இது நடந்தது.

வலிமை அப்டேட் 

ஹெச்.வினோத் உடன் அஜித் மீண்டும் இணைவதாக அறிவிக்கப்பட்டது; இந்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்திற்கு ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவியது; தொடர்ந்து படத்தின் அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில்தான் இடையே கொரோனா பரவல் தொடங்கியது. இதனால் படம் குறித்தான அப்டேட் வரவே இல்லை; இதனால் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் அப்டேட் அப்டேட் என்று கேட்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தின் தலைப்பு ‘வலிமை’ என்று டீசர் வாயிலாக அறிவிக்கப்பட்டது. இது அப்படியே துணிவுக்கும் நடந்தது.

கேமை நகர்த்திய லோகேஷ் 

 

விக்ரமுக்கும் இதே போலத்தான்.. மாஸ்டர் படத்தின் மூலம் கவனம் பெற்றிருந்த லோகேஷ், அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனுடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான அன்றிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமானது. அத்துடன் படம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகிறது என லோகேஷ் கொளுத்திப்போட, டைட்டில் அறிவிப்பே மாஸ் வீடியோவாக வெளியானது. தற்போதும் அதே பாணியிலேயே விஜயின் 67 ஆவது படமான ‘லியோ’ வின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. டைட்டில் அறிவிப்பு வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லோகேஷை கொண்டாடி வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்