தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Krithi Shetty First Look Poster From Custody Movie Out

Krithi Shetty in Custody: கிருத்தி ஷெட்டியின் சுவாரஸ்யமான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Aarthi V HT Tamil
Jan 18, 2023 12:34 PM IST

Krithi Shetty First Look in Custody: கஸ்டடி படத்தில் நடித்து வரும் கிருத்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிருத்தி ஷெட்டி
கிருத்தி ஷெட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் படத்தில் கிருத்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று ( ஜன 18 ) வெளியிட்டது.

கஸ்டடி படத்தில் ரேவதி வேடத்தில் க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கிருத்தி ஷெட்டி சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் காணப்படுகிறார்.

அதனால் அவர் இந்த படத்தில் கைதியாக நடிப்பார் என தெரிகிறது. கிருத்தி ஷெட்டியின் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாஜ்

ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் கஸ்டடி படத்தில் நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வெள்ளித்திரையில் முதன்முறையாக நாக சைதன்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் இதுவாகும்.

கஸ்டடி படத்தில் அரவிந்த சுவாமி வில்லனாக நடிக்கிறார். அவருடன் படத்தில் சரத்குமார், வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி, பிரேமி விஸ்வநாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் தம்பி யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.

அதிக பொருட்செலவிலான தயாரிப்பு மற்றும் உயர்தரமான தொழில்நுட்பத்துடன் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தை தயாரித்து வருகிறார்.

கஸ்டடி திரைப்படம் மே 12 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:

நாக சைதன்யா கடைசியாக அமீர் கான் மற்றும் கரீனா கபூர் நடித்த இந்தி திரைப்படமான லால் சிங் சத்தாவில் நடித்தார். அப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதே போல் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி ஏற்கனவே பங்கர்ராஜ் படத்தில் இணைந்து நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்