Pushpa 2: புஷ்பா 2 இயக்குநருக்கு ரூ.100 கோடி சம்பளமா? வாயைப் பிளக்கும் கோலிவுட் வட்டாரம்
டோலிவுட்டின் முன்னணி இயக்குநர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டோலிவுட்டின் முன்னணி இயக்குநர் சுகுமாருக்கு ரூ. 100 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் சுகுமார். அவரது இயக்கத்தில் அண்மையில் ரிலீஸான புஷ்பா படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்து இருந்தனர்.
2021ஆம் ஆண்டு ரிலீஸான இப்படம் சுமார் 350 கோடி ரூபாய் வசூலை அள்ளி, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அப்போது புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமாருக்கு சுமார் ரூ.25 கோடி சம்பளமாகத் தரப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பல்வேறு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் இப்படத்திற்குண்டான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது எனக்கூறப்படுகிறது.