Tamil Movies on this day: தமிழில் முதல் இதிகாச படம்..இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகம்! ஆகஸ்ட் 22இல் வெளியான தமிழ் படங்கள்-know about the list of tamil movies released on this day august 22 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies On This Day: தமிழில் முதல் இதிகாச படம்..இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகம்! ஆகஸ்ட் 22இல் வெளியான தமிழ் படங்கள்

Tamil Movies on this day: தமிழில் முதல் இதிகாச படம்..இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகம்! ஆகஸ்ட் 22இல் வெளியான தமிழ் படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 23, 2024 06:21 AM IST

Tamil Movies Released on Aug 24: தமிழில் முதல் இதிகாச படம் கண்ணகி திரைப்படம் முதல் இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகமான நாடோடி மன்னன், அவருக்கு மற்றொரு சூப்பர் ஹிட்டாக அமைந்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த படம் என ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய படங்கள் லிஸ்ட்.

Tamil Movies on this day: தமிழில் முதல் இதிகாச படம்..இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகம்! ஆகஸ்ட் 22இல் வெளியான தமிழ் படங்கள்
Tamil Movies on this day: தமிழில் முதல் இதிகாச படம்..இயக்குநராக எம்ஜிஆர் அறிமுகம்! ஆகஸ்ட் 22இல் வெளியான தமிழ் படங்கள்

பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் சமீபத்திய காலம் வரை ஆகஸ்ட் 22இல் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ

கண்ணகி

தமிழில் வெளியான முதல் இதிகாசம் திரைப்படம் என்ற பெருமையை பெற்ற கண்ணகி 1942இல் வெளியானது. இந்த படத்தில் பி.யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா, எம். எஸ். சரோஜா ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தமிழ் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகார கதையை மையப்படுத்தி படம் உருவாகியிருக்கும். இந்த படம் வெளியாகி இன்றுடன் 82 ஆண்டுகள் ஆகிறது.

நாடோடி மன்னன்

ஆக்‌ஷன் சாகசங்கள் நிறைந்த திரைப்படமான நாடோடி மன்னன் எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படமாக மட்டுமல்லாமல், அவர் இயக்குநராக அறிமுகமான படமாகவும் உள்ளது. 1958இல் வெளியான இந்த படத்துக்கு ஆர்.எம். வீரப்பன் கதை ப. நீலகண்டன், கே. சீனிவாசன், சி. குப்புசாமி ஆகியோரின் திரைக்கதையுடன் அனைத்து விதமான ஜனரஞ்சக விஷயங்களும் இடம்பிடித்த படமாக நாடோடி மன்னன் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ரூ. 8 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி ரூ. 1 கோடிக்கு மேல் அப்போதே பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.

எம்ஜிஆர் ஜோடியாக பி. பானுமதி நடித்திருப்பார். பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார், சந்திரபாபு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். சிறந்த கிளாசிக் பாடலான தூங்காதே தம்பி தூங்காதே பாடல் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. எம்ஜிஆர் ரசிகர்களால் மறக்க முடியாத நாடோடி மன்னன் வெளியாகி இன்றுடன் 66 ஆண்டுகள் ஆகின்றன

இதயக்கனி

எம்ஜிஆர் நடித்த மற்றொரு படமாக இருக்கும் இதயக்கனி படத்தில் ராதா சலூஜ ஹீரோயினாக நடித்திருப்பார். மனோகர், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி. ராமதாஸ் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தத்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது. 1978இல் நடந்த டஸ்கெட் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்திய படம் என்ற பெருமை பெற்றிருக்கும் இதயக்கனி படத்துக்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

அதிமுகவின் அரிச்சுவடி பாடலாக இருக்கும் நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற, எம்ஜிஆரின் சிறந்த ரெமாண்டிக் பாடலாக இருக்கும் இன்பமே உந்தன் பெயர் பாடல் இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளன. ஜெகன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகிறது.

மாடி வீட்டு ஏழை

தசரி நாரயண ராவ் கதை எழுத, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திரைக்கதை எழுத, அமிர்தம் இயக்கிய படம் மாடி வீட்டு ஏழை. சிவாஜி கணேசன், சுஜாதா, ஸ்ரீ பிரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏதாந்தஸ்துல மேதா படத்தின் ரீமேக்காக 1981இல் இந்த படம் வெளியானது. படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனம் பெரிதாக பேசப்பட்டதோடு நல்ல வரவேற்பையும் பெற்றது. சிவாஜி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது

ராமன் அப்துல்லா

பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும் ராமன் அப்துல்லா 1997இல் வெளியானது. 1994இல் வெளியான மலப்புரம் ஹாஜி மகாநய ஜோஜி என்ற மலையாள பட ரீமேக்காக உருவான இந்த படத்தில் சிவக்குமார், கரண், விக்னேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். ஹீரோயின்களாக ஈஸவரி ராவ், அஸ்வினி ஆகியோர் நடித்திருப்பார்கள்.

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்த போதிலும் இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் மனதில் நீங்காதவையாக இருந்து வருகின்றன. என் வீட்டு ஜன்னல், செம்பருத்தி பெண் ஒருத்தி, முத்தமிழே முத்தமிழே போன்ற பாடல்கள் இப்போது வரை ஒலிக்கும் பெஸ்ட் இளையராஜா ஹிட்ஸ்களாக இருக்கின்றன. தமிழ் அரசின் சிறப்பு விருதை பெற்ற ராமன் அப்துல்லா வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது

நாயகன்

மறைந்த நடிகர் ஜே.கே. ரித்தீஷ், ரமணா, சங்கீதா, கீர்த்தி சாவ்லா, அனிதா, ஆனந்த ராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க 2008இல் வெளியான படம் நாயகன். சரவண சக்தி இயக்கிய இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ரசிகர்களை கவர்ந்தது.

2004இல் வெளியான ஹாலிவுட் படமான செல்லுலார் படத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரீமேக்காக இந்த படம் உருவாகியிருந்தது. ரித்தீஷ் பில்டப், மாஸ் காட்சிகள் டிவிக்களில் அதிகமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டு படம் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினர். சராசரி ஹிட்டாக அமைந்த ஜே.கே. ரித்தீஷின் நாயகன் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.