எனக்கு ஒன்னும் புரியல.. அண்ணனைக் காணாமல் குழப்பத்தில் கயல் இருக்க தொடரும் காதல் காவியம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எனக்கு ஒன்னும் புரியல.. அண்ணனைக் காணாமல் குழப்பத்தில் கயல் இருக்க தொடரும் காதல் காவியம்..

எனக்கு ஒன்னும் புரியல.. அண்ணனைக் காணாமல் குழப்பத்தில் கயல் இருக்க தொடரும் காதல் காவியம்..

Malavica Natarajan HT Tamil
Oct 22, 2024 06:51 AM IST

திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்துள்ள கயல் அண்ணன் மூர்த்தியைக் காணாமல் குழப்பத்தில் உள்ளார்.

எனக்கு ஒன்னும் புரியல.. அண்ணனைக் காணாமல் குழப்பத்தில் கயல் இருக்க தொடரும் காதல் காவியம்..
எனக்கு ஒன்னும் புரியல.. அண்ணனைக் காணாமல் குழப்பத்தில் கயல் இருக்க தொடரும் காதல் காவியம்..

அண்ணனைத் தேடும் கயல்

திருமணம் முடிந்தப் பின் புதுமணத் தம்பதியாக தாய் வீட்டிற்கு வந்துள்ளனர் கயலும் எழிலும். அங்கு, வீட்டில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கயல், நீண்ட நேரமாகியும் அண்ணன் மூர்த்தி அங்கு வராததால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கேள்வி எழுப்புகிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் கயலிடம் என்ன சொல்லி சமாளிப்பது என யோசித்து வருகின்றனர்.

போனை எடுக்காத மூர்த்தி

பின் பொறுத்து பொறுத்து பார்த்த கயல், அண்ணன் மூர்த்திக்கும், அன்புவிற்கும் மாறி மாறி போன் செய்து வருகிறார். அப்போது, அண்ணன் மூர்த்தியின் போன் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதால் மேலும் குழப்பம் அடைகிறார்.

இந்த சமயத்தில் தான் ஐசியுவில் மூர்த்தி இருப்பதைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கும் அன்புவை சமாதான் செய்கிறார் அவரது அத்தை பெண்.

இந்த நிலையில், கயலுக்கு மட்டும் எல்லா நல்லதும் நடக்கிறது, நம் மகளுக்குத் தான் எதுவும் ஆகவில்லை என தம்பதி மருத்துவமனையில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

காதல் காவியம்

அப்போது, அன்புவைக் கண்ட அவர்கள், இந்தக் காதல் காவியம் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறதா, இதை வைத்தே என் பெண்ணுக்கு திருமணம் செய்வென் என சபதமெடுக்கிறார்.

இந்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது. மேலும், இன்று முழுவதும் நடக்கவுள்ள தொடர்களை சன் டிவியில் காணலாம்.

நேற்றைய எபிசோடில், கயல் திருமணம் முடிந்த கையோடு உண்மையை தெரிந்து கொண்ட அன்பு, மூர்த்தியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு, என் அண்ணன் வலியால் துடித்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்குமாறு போராடுகிறார்.

சிகிச்சை தர மறுக்கும் மருத்துவர்கள்

ஆனால், அவரை சிலர் கத்தியால் குத்தியதால், முதலில் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு வந்த பின் தான் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர் கூறுகிறார்.

ஆனால் அன்போ நானே போலீஸ் ஆக போகிறவன் தான் எனக்கும் ரூல்ஸ் தெரியும், முதலில் சிகிச்சை அளியுங்கள் நாங்கள் போலீசில் புகார் தருகிறோம் என வாதிட்டு வந்தார்.

மாமியாரை பயப்படுத்தும் கயல்

இந்த நிலையில், மறு வீட்டிற்கு வந்த கயலையும் எழிலையும் அவரது குடும்பத்தாரையும் கயலின் பெரியப்பா வரவேற்று உபசரித்தார்.

இதற்கிடையில், எழிலிடம் கயல் ஒரு ரகசியத்தை கூறப் போவதாக சொல்ல, எழிலின் அம்மாவிற்கு அதை பயத்தை அதிகரித்தது. எங்கு என்னைப் பற்றி தான் கூறுகிறாளோ என்ற பயத்திலேயே இருக்கிறார். இதைப் பார்த்த எழில் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏதோ ரகசியம் ஓடுகிறது என கிண்டலடித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.