கத்திக்குத்தை மறைத்த மூர்த்தி.. வெடிக்க காத்திருக்கும் பாம்.. திக் திக் நிமிடங்கள்.. பரபரக்கும் கயல் சீரியல்
கயல் சீரியலில் மணமேடை தட்டில் இருக்கும் தேங்காயில் பாம் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அது எப்போது வெடிக்கும் என்ற பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.
கயல் சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில், “ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த மூர்த்தி, கயலுக்கு கம்மலை கொடுத்தான். இன்னொரு பக்கம் இதை பொறுக்காத சிவசங்கரி, தயாளனுக்கு போன் செய்து, நீங்கள் அவனை குத்தி சாகடித்து விட்டீர்கள் என்று கூறினீர்கள். ஆனால் அவன் இங்கே வந்து விட்டான் என்று கூற, அவன் அதிர்ச்சி அடைகிறான்.
இதற்கிடையே வடிவும், தர்மலிங்கமும் பாம் வைக்கப்பட்டிருக்கும் தேங்காவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவை தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கயல் கல்யாணத்தை பார்க்க வேண்டும்
கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், மூர்த்தியை தயாளன் அனுப்பிய ஆட்கள் குத்திய நிலையில், அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதற்கிடையே அங்கு வந்த ஒரு பாட்டி ஒருவர், அவனை காப்பாற்றும் முயற்சியில், கார் ஒன்றை வழிமறிக்க, அது டாக்டர் ஒருவரின் காராக இருந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர், மூர்த்திக்கு முதலுதவி செய்தார். தொடர்ந்து, அவர் மூர்த்தியை தன்னுடைய கிளினிக்கு அழைத்துச் செல்ல முற்படும்பொழுது, மூர்த்தி நான் என்னுடைய தங்கையின் கல்யாணத்தை நிச்சயமாக பார்த்தே ஆக வேண்டும். ஆகையால், எனக்கு சிகிச்சை அளிக்கு முன்னர் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினான்.
மூர்த்தியின் கோரிக்கையை நிறைவேற்றிய மருத்துவர்
ஆரம்பத்தில் அதனை மறுத்த டாக்டர்,மூர்த்தியின் பிடிவாதத்தின் காரணமாக, அவரை மருத்துவமனைக்கு பதிலாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கயல், மூர்த்தி அண்ணன் வராமல் நான் மணமேடைக்கு வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த மூர்த்தி, கயலை சமாதானம் செய்ய, அவளோ உனக்கு என்ன ஆனது என்று துருவித் துருவி கேட்டுக் கொண்டிருந்தாள். ஒருவழியாக கயலை சமாளித்த மூர்த்தி, அவளை மணமேடைக்கு அனுப்பி வைத்தான்.
இதற்கிடையே தேங்காயில் பாம் இருப்பதை தெரிந்து கொண்ட வடிவும், தர்மலிங்கமும் அதை எப்படியாவது கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் ஆனால், எதிர்பாராத விதமாக அந்த தேங்காய் மணமேடையில் வைக்கப்படும் தட்டிற்கு சென்றுவிட்டது இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் கயல் கல்யாணம் நடக்குமா நடக்காதா என்பதை இன்றைய தினம் பார்க்கலாம்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்