Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா.. அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்-karthik abuses geetha abhirami gives a shock weekend update of karthigai deepam episode - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா.. அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா.. அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 07, 2024 02:18 PM IST

Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா, அபிராமி கொடுத்த அதிர்ச்சி என பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் வீக்கென்ட் எபிசோட் உள்ளது.

Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா.. அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்
Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா.. அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த கீதா கார்த்திக்கை காபி போட்டு கொடுக்க சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் கீதாவுக்கு காபி கொடுக்கிறான், பிறகு ஆனந்த் கார்த்திக்கு போன் செய்து அம்மாவை டிஸ்ஜார்ஜ் செய்து அழைத்து வருவதாகவும் ஆரத்தி எல்லாம் ஏற்பாடு பண்ணிவை என்றும் சொல்ல கார்த்திக்கும் ஓகே சொல்கிறான்.

ஆரத்தி பற்றிய விளக்கம்

பிறகு கீதாவை ஆரத்தி எடுக்க சொல்லணுமே.. அவ என்ன சொல்லுவா என்று பயப்படுகிறான். பிறகு கீதாவிடம் விஷயத்தை சொல்ல அவள் ஆரத்தினா என்னனு கேட்க கார்த்திக் சரியா போச்சு என்று கடுப்பாகிறான், பிறகு ஆரத்தி என்றால் என்ன என்று விளக்கி எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் செய்து காட்ட கீதா நீ தான் நல்லா எடுக்கிறியே, நீயே எடுத்துட்டு என்று சொல்கிறாள்.

இதெலாம் பெண்கள் தான் எடுப்பாங்க, அது தான் சம்பிரதாயம் என்று சொல்ல கீதாவும் ஓகே சொல்கிறாள். பிறகு அபிராமி வீட்டுக்கு வர கீதா ஹாய் ஆண்ட்டி என்று சொன்னதும் எல்லாரும் ஷாக்காக கார்த்திக் தீபாவுக்கு தலையில் அடிபட்டதால் இப்படி நடந்து கொள்வதாக சமாளிக்கிறான்.

பிறகு கீதா ஆரத்தி எடுத்து அதை ஐஸ்வர்யா முகத்தில் ஊற்றி விட ஐஸ்வர்யா நம்ம மீது இருக்கும் கோபத்தை

தான் இப்படி மறைமுகமாக காட்டுவதாக புரிந்து கொள்கிறாள். அதன் பிறகு அபிராமி பூஜையறையில் சாமி கும்பிட்டு விட்டு சீக்கிரம் கார்த்திக், தீபாவிற்கு கல்யாணம் செய்யணும் என்று சொல்ல கீதா இப்போ எதுக்கு அதெல்லாம் என்று கோபப்படுகிறாள்.

கீதா பேசுவதை ஒட்டுக்கேட்கும் ஐஸ்வர்யா

அதை தொடர்ந்து கார்த்திக் கீதாவை ரூமுக்குள் அழைத்து சென்று நான் சமாளித்து கொள்கிறேன், நீங்க டென்ஷன் ஆக வேண்டாம் என்று சொல்கிறான். தர்மலிங்கமும் ஜோதியும் தீபா என நினைத்து கீதாவிடம் பேச அவ உங்க வேலையை மட்டும் பாருங்க என்று கோபப்பட இருவரும் தீபா இப்படி எல்லாம் பேச மாட்டாளே என்று குழப்பம் அடைகின்றனர்.

அடுத்து கார்த்திக் மற்றும் கீதா ரூமுக்குள் பேசி கொண்டிருக்க ஐஸ்வர்யா அதை ஒட்டு கேட்டு கொண்டிருக்க வெளியே வந்த கீதா இதை பார்த்து விட்டு அவளை பிடித்து திட்டி விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி கொண்டிருக்க அருண் ரூமுக்குள் வந்து விடுகிறாள்.

மொத்தத்தையும் பேசி முடித்த ஐஸ்வர்யா பக்கத்தில் அருண் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் சீரியல்

இந்த சீரயலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் , அர்திகா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். விசித்ரா, மீரா கிருஷ்ணன், நடிகர் ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்தித்தில் தோன்றுகிறார்கள். விஜயகுமார், வனிதா விஜயகுமார், வடிவுக்கரசி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் டிவி சீரியல்கள் அதிகம் பேரால் பார்த்து ரசிக்ககூடிய கார்த்திகை தீபம் சீரியல் 2022 முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ பங்களா டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணாகோயில் சீரியலின் ரீமேக்காக கார்த்திகை தீபம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.