Karthigai deepam: “காஃபி போட்டு எடுத்து வாடா கார்த்திக்.. அலற விட்ட போலிதீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today september 6 2024 episode update indicates - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: “காஃபி போட்டு எடுத்து வாடா கார்த்திக்.. அலற விட்ட போலிதீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: “காஃபி போட்டு எடுத்து வாடா கார்த்திக்.. அலற விட்ட போலிதீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 06, 2024 03:43 PM IST

Karthigai deepam: அபிராமி கண் திறக்காமல் இருக்க தீபா குரலை கேட்டதும், கண் திறந்து சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு கார்த்திக் மற்றும் கீதா என இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: “காஃபி போட்டு எடுத்து வாடா கார்த்திக்.. அலற விட்ட போலிதீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: “காஃபி போட்டு எடுத்து வாடா கார்த்திக்.. அலற விட்ட போலிதீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், கீதா தீபாவாக புடவை கட்டிக்கொண்டு அபிராமியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் அப்டேட்

கார்த்திகை தீபம் அப்டேட்

அதாவது கீதா வந்ததும், அவளை தீபாவாக நினைத்து மீனாட்சி கட்டிப்பிடித்து வரவேற்கிறாள். அதே சமயத்தில், ஐஸ்வர்யா தீபாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இவ எப்படி இங்கு வந்தா? உண்மை எல்லாம் வெளிய வந்து மாட்டிப்போமோ என பதறுகிறாள். பிறகு தீபாவை அபிராமி இருக்கும் ரூமிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

அபிராமி கண் திறக்காமல் இருக்க தீபா குரலை கேட்டதும், கண் திறந்து சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு கார்த்திக் மற்றும் கீதா என இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.

கோபமாகி காரை நிறுத்த சொன்ன கீதா

கார்த்திக் எப்படி தீபாவாக நடிக்க ஒத்துக்கிட்டீங்க என்று கேட்க நீங்க உங்க அம்மாவுக்காக என்று சொன்னதும் என் மனசு மாறிடுச்சு என்று சொல்லி சமாளித்தாள். ஆனால் இன்னொருபக்கம் கீதா, இதுல என்னுடைய சுயநலமும் இருக்கு.. என்னை காப்பாத்திக்கிறதுக்காகத்தான் நான் இப்படி நடிக்கிறேன் என மைண்டு வாய்ஸில் சொல்லிக்கொள்கிறாள்.

காபி குடிக்கணும் போல இருக்கு!

பிறகு கார்த்திக் நீங்க யாரு என்ன எது என்று விசாரிக்க, கீதா கோபமாகி காரை நிறுத்த சொல்கிறாள். நான் தீபாவாக தொடர்ந்து நடிக்கணும்னா என்னை பத்தி எந்த விஷயத்தையும் கேட்கக்கூடாது என கண்டிஷன் போடுகிறாள்.

கார்த்திக்
கார்த்திக்

இதைத் தொடர்ந்து கார்த்திக் மன்னிப்பு கேட்டு, வீட்டுக்கு வந்து சேர கீதா எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு, எனக்கு காபி எல்லாம் போடத் தெரியாது, குடிக்க மட்டும்தான் தெரியும். போட்டு எடுத்துட்டு வா என ஆர்டர் போடுகிறாள்.

அடுத்ததாக நடக்கப் போவது என்ன?

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ‌

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.