Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!-karthigai deepam serial weekend episode on august 31 and september 2 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!

Aarthi Balaji HT Tamil
Aug 31, 2024 03:36 PM IST

Karthigai Deepam: தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா தீபாவையும் மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள், பிறகு போலீஸ் சம்பவ இடத்திற்கு வர ரியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!
Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!

துப்பாக்கியை எடுத்த ரம்யா

அதாவது, ரம்யா துப்பாக்கியை எடுத்து சுட தவறுதலாக ரியா மீது குண்டு பாய அவள் உயிரிழக்கிறாள். அதன் பிறகு தீபா மற்றும் ரம்யா இடையே நடக்கும் மோதலில் ரம்யா மலை உச்சியில் இருந்து தவறி கீழே விழ தீபா கை கொடுத்து அவளை காப்பாற்ற முயற்சி செய்ய நீ போடும் உயிர் பிச்சை வேண்டாம் என்று ரம்யா கையை உதறி கீழே விழுகிறாள்.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா தீபாவையும் மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள், பிறகு போலீஸ் சம்பவ இடத்திற்கு வர ரியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அங்கு தீபாவின் மோதிரம் விழுந்து கிடப்பதை பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

தீபா தான் மருந்து

ரம்யா மற்றும் தீபாவை தேடுகின்றனர், இதற்கிடையில் கார்த்திக் அபிராமியை பார்க்க ஹாஸ்பிடல் வந்திருக்க அபிராமி தீபா பெயரை மட்டுமே உச்சரிக்க டாக்டர் தீபா தான் மருந்து.. தீபா வந்தால் தான் அபிராமி கண் விழிப்பார் என்று சொல்கிறார்.

தீபா திரும்பி வருவது சந்தேகம்

இந்த இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வர வைத்து தீபாவின் புடவை, ரம்யாவின் புடவையை கொடுத்து இங்கிருந்து விழுந்தால் பாடி எதுவும் கிடைக்காது, தீபா திரும்பி வருவது சந்தேகம் தான் என்று ஷாக் கொடுக்கின்றனர். இதனால் உடைந்து போய் கார்த்திக் மீண்டும் ஹாஸ்பிடல் வர கண் விழிக்கும் அபிராமி மீண்டும் தீபாவை கேட்க கார்த்திக் தீபா பாதுகாப்பாக இருப்பதாக பொய் சொல்கிறான்.

அடுத்து நடக்க போவது என்ன

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

 தீபா கடத்தப்பட்டதும், கல்யாணம் நின்று போன சோகத்தில், அபிராமி மயங்கி விழுந்து உடல்நிலை மோசமடைந்தாள். இதனையடுத்து, அவளை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். இன்னொரு பக்கம், ரியா கார் ஓட்ட, ரம்யா தீபாவை துப்பாக்கி முனையில் வைத்து கடத்திச்செல்கிறாள். கார்த்திக் இன்னொரு பக்கம் இவர்களை தேடி அலைகிறான் தீபாவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிக்கிறான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.