Karthigai Deepam: “புது ஸ்கெட்ச் போடும் ஐஸ்வர்யா.. தொக்காக மாட்டிய துங்கா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: “தீபா இருக்கும் இடமே தெரியல, அப்படி இருக்கும் போது ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேட்க, தீபா வந்துடுவா என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சொல்கிறாள்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!
துங்கா கேட்ட கேள்வி.. ஷாக்கான கார்த்திக், அபிராமி வாக்கால் நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கீதா துங்காவிடம் சரணடைய, கார்த்திக் அவளை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துங்காவிற்கு பறந்த கால்
அதாவது, ஐஸ்வர்யா துங்காவிற்கு போனை போட்டு பேசி கொண்டிருக்க, அருண் அங்கு வந்து விட்டான். இதனையடுத்து, ஐஸ்வர்யா பதற்றம் அடைகிறாள். யாருகிட்ட பேசிட்டு இருந்த என்று அவன் கேட்க, ஃப்ரண்ட்டுடன் பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். அடுத்து அவள் துங்காவை சந்தித்து பேச, அப்போது அவன் கீதா மாதிரியே தீபான்னு ஒருத்தி இருக்காளா என்று கேட்க, ஐஸ்வர்யா வேறு வழியின்றி ஆமாம் என்று சொல்கிறாள். மேலும் தீபாவை பிடித்து விட்டால், அதை வைத்து கீதாவை கண்டு பிடித்து விடலாம் என்று துங்காவை ஏற்றி விடுகிறாள்.
இதை தொடர்ந்து அபிராமி வீட்டிற்கு சிலர் வந்து, சரஸ்வதி சேவா நிகழ்ச்சிக்கு தீபாவோட கச்சேரியை புக் பண்ணி இருந்தோம். அவங்க வந்துடுவாங்களா என்று கேட்க, அபிராமி வந்துடுவா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இதனையறிந்த கார்த்திக் ஷாக் ஆகிறான். தீபா இருக்கும் இடமே தெரியல, அப்படி இருக்கும் போது ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேட்க, தீபா வந்துடுவா என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சொல்கிறாள். இதையடுத்து கார்த்திக் மற்றும் ஆனந்த் அம்மாவின் ஆசைக்காக தீபாவை கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கணும் என்று முடிவு எடுக்கின்றனர்.
மறுபக்கம் ஆசிரமத்தில் தீபா குணமடைய வேண்டும் என்று குழந்தைகள் அவளுக்காக பிராத்தனை செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கீதா லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு கிளம்பிச் செல்ல, ஐஸ்வர்யா இந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். கீதா துங்காவிடம் சரணடைந்தால் அவன் தீபாவை விட்டு விடுவான்.அதனால நமக்கு தான் ஆபத்து என அஞ்சினாள். அதனால், இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முடிவெடுத்த ஐஸ்வர்யா, எல்லாரையும் கூட்டி லெட்டரை காட்டி விஷயத்தை சொல்ல, கார்த்திக் கீதாவை காப்பாற்ற கிளம்பிச் சென்றான்.
கொல்லத்துணியும் துங்கா - அதிர்ச்சியில் கீதா
மறுபக்கம் கீதா துங்காவை சந்திக்க அவன், நான் உன்னையே கொல்லப்போறேன் என்று சொல்ல, அங்கே என்ட்ரி கொடுத்த கார்த்திக், துங்காவிடம் இருந்து கீதாவை காப்பாற்றினான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்
டாபிக்ஸ்