Karthigai Deepam: கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த ஷக்தி நர்ஸ்.. ஐஸ்வர்யாவால் வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்-karthigai deepam serial today episode on september 26 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த ஷக்தி நர்ஸ்.. ஐஸ்வர்யாவால் வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்

Karthigai Deepam: கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த ஷக்தி நர்ஸ்.. ஐஸ்வர்யாவால் வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Sep 26, 2024 01:38 PM IST

Karthigai Deepam: ஷக்தி, தீபாவை ஒரு கோவிலுக்குள் மறைத்து வைக்கிறாள், இதே கோவிலுக்கு தான் அபிராமி எல்லாரையும் அழைத்து வந்திருக்கிறாள்.

Karthigai Deepam: கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த ஷக்தி நர்ஸ்.. ஐஸ்வர்யாவால் வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்
Karthigai Deepam: கார்த்திக் ஆபிஸ்க்கு வந்த ஷக்தி நர்ஸ்.. ஐஸ்வர்யாவால் வந்த ஆபத்து - கார்த்திகை தீபம்

இந்த சீரியலின் நேற்றைய ( அக். 25 ) எபிசோடில் அபிராமி எல்லாரையும் கூப்பிட்டு கொண்டு கோவிலுக்கு கிளம்ப இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷக்தி நர்ஸ் தீபாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறாள். தீபாவை பரிசோதனை செய்த டாக்டர் அவங்க ரொம்ப வீக்காக இருக்காங்க என்று சொல்கிறார். பிறகு ஷக்தி மீண்டும் தீபாவை அழைத்து கொண்டு அதே ஆட்டோவில் ஏறுகிறாள்.

கார்த்திக்கை பார்க்க வேண்டும்

ஆட்டோ ட்ரைவர் ஆசிரமத்துக்கு தான் போகணுமா என்று கேட்க இல்ல கார்த்திக்கோட ம்யூசிக் கம்பெனிக்கு போங்க என்று சொல்கிறாள், இவர்கள் கம்பெனிக்கு வந்து கார்த்திக்கை பார்க்க வேண்டும் என்று விசாரிக்க கார்த்திக் சார் இல்ல, அவரோட அண்ணன் அருண் தான் இருப்பதாக சொல்கின்றனர்.

ஷக்தி அருணை பார்த்து விட்டு செல்லலாம் என்று காத்திருக்க அருணை கோவிலுக்கு அழைத்து செல்ல ஆபிஸ் வருகிறாள் ஐஸ்வர்யா, இதை பார்த்த ஷக்தி மறைந்து கொள்கிறாள். ஐஸ்வர்யா உள்ளே வந்து அருணை அழைக்க அவன் என்ன பார்க்க நர்ஸ் ஷக்தினு யாரோ வந்திருக்காங்களாம்.

சிசிடிவி காட்சி

அவங்க வெளியே தான் இருக்காங்க, கூட்டிட்டு வா பார்த்துட்டு போய்டலாம் என்று சொல்ல ஷக்தி என்ற பெயரை கேட்டதும் ஐஸ்வர்யா ஷாக்காகி வெளியே வர அதற்குள் இவர்கள் அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகின்றனர். ஐஸ்வர்யா சிசிடிவி காட்சியை பார்த்து விட்டு துங்காவிற்கு தகவல் கொடுக்க அவன் ஆட்டோவை பின்தொடர்ந்து செல்கிறான்.

இதனால் ஷக்தி, தீபாவை ஒரு கோவிலுக்குள் மறைத்து வைக்கிறாள், இதே கோவிலுக்கு தான் அபிராமி எல்லாரையும் அழைத்து வந்திருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

சீரியலின் நேற்றைய ( அக். 25 ) எபிசோடில் ஆசிரமத்தில் இருக்கும் நர்ஸ் தீபாவுக்கு தனக்கு தெரிந்த வைத்தியத்தைப் பார்க்க, இங்கே தூக்கத்தில் இருந்த கார்த்திக் திடீரென எழுந்து தீபாவுக்கு ஏதோ ஆபத்து என்பது போல் தோன்றுவதாக ஃபீல் செய்ய, கீதா தீபாவுக்கு எதுவும் ஆகாது என்று கூல் செய்கிறாள்.

மறுபக்கம் தீபாவுக்கு காய்ச்சல் குறையாத நிலையில் என்னென்னமோ செய்து பார்க்கின்றனர். ஆனாலும் காய்ச்சல் குறையாத காரணத்தால் ஷக்திக்குத் தகவல் கொடுக்க, அவளும் ட்ரீட்மெண்ட் கொடுக்க, அப்போதும் குணமாகாத காரணத்தால் ஒரு டாக்டருக்கு போன் செய்கிறார்கள்.

டாக்டரிடம் தனது உறவுக்காரப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி என்ன ட்ரீட்மென்ட் கொடுப்பது என்று விசாரிக்க, அவர் சில வழிமுறைகளை சொல்ல அதையும் பின்பற்றி பார்க்க, அப்போதும் எந்த பயனும் இல்லை, உடல்நிலை தீபாவுக்கு சரியாகாமல் தான் இருக்கிறது என்று தெரிய வருகிறது.

இதனால் டாக்டர் அந்தப் பெண்ணை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வரச்சொல்ல ஷக்தி, துங்காவுக்கு பயந்து தயங்கினாலும் வேறு வழியில்லை என்பதால் தீபாவை ஹாஸ்பிடல் அழைத்துச்செல்ல முடிவெடுக்கிறாள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.