Karthigai Deepam: தீபாவுக்கு பல்பு கொடுத்த கார்த்திக்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கல்யாண மாப்பிள்ளை-karthigai deepam serial full episode on august 10 and 11 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவுக்கு பல்பு கொடுத்த கார்த்திக்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கல்யாண மாப்பிள்ளை

Karthigai Deepam: தீபாவுக்கு பல்பு கொடுத்த கார்த்திக்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கல்யாண மாப்பிள்ளை

Aarthi Balaji HT Tamil
Aug 10, 2024 12:40 PM IST

Karthigai Deepam: ரமேஷ் ரம்யா வீட்டிற்கு கார்பெண்டர் மற்றும் டிராவல் ஏஜென்ட் ஒருவருடன் வந்து தேக்கு மரத்தில் கட்டில் செய்ய சொல்லி ஹனி மூன் பற்றி பேச ரம்யா கடுப்பாகிறாள்.

பல்பு கொடுத்த கார்த்திக்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கல்யாண மாப்பிள்ளை
பல்பு கொடுத்த கார்த்திக்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கல்யாண மாப்பிள்ளை

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா அபிராமியிடம் இருந்து தாலியை திருட கார்த்திக் ஸ்மார்ட்டான பிளானை போட்டு அதை திருப்பி கொண்டு வந்து கொடுக்க வைத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தேக்கு மரத்தில் கட்டில்

அதாவது, ரமேஷ் ரம்யா வீட்டிற்கு கார்பெண்டர் மற்றும் டிராவல் ஏஜென்ட் ஒருவருடன் வந்து தேக்கு மரத்தில் கட்டில் செய்ய சொல்லி ஹனி மூன் பற்றி பேச ரம்யா கடுப்பாகிறாள்.

ஒருகட்டத்தில் துப்பாக்கியை எடுத்து ரமேஷ் நெஞ்சில் வைக்க அவன் ரம்யா ரம்யா சுட்டுடாத என் இதயம் பூரா நீ தான் இருக்க.. உன்னை நீயே சுட்டுப்பியா என்று சொல்ல ரம்யா நீ போய் செத்துடு அப்போ தான் எனக்கு நிம்மதி என்று திட்டுகிறாள்.

அபிராமி வீட்டில் கல்யாண ஏற்பாடு

உடனே ரமேஷ் மாடி மீது ஏறி கீழே குதித்து சாக போவதாக சொல்ல ரம்யா பதறி போய் உன்னை மன்னிச்சிட்டேன், கீழே இறங்கு என்று கெஞ்ச ரமேஷ் கீழே இறங்கி வருகிறான். மறுபக்கம் அபிராமி வீட்டில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க தீபா பழைய விஷயங்களை நினைத்து பார்க்கிறாள்.

அதெல்லாம் எதுக்கு?

இதை தொடர்ந்து எல்லாருக்கும் புடவை எடுக்க அபிராமி ரம்யாவிடம் நீயும் உனக்கு பிடிச்ச மாதிரி புடவை எடுத்துக்கோ மா என்று சொல்கிறாள். தீபா கார்த்திக் சாருக்கு பிடித்த மாதிரி நான் எடுத்துக்கவா என்று கேட்க ஐஸ்வர்யா அதெல்லாம் எதுக்கு? உனக்கு பிடித்த மாதிரி எடுத்தா போதாதா என்று சொல்ல அபிராமி நீ உன் விருப்பப்படி செய் என்று அனுமதி கொடுக்கிறாள்.

மீனாட்சி நான் மூணு கலர் புடவையை தேர்வு செய்து ஆனந்த் அதுல எனக்கு பிடித்த கலரை தேர்வு செய்யுறாரான்னு செக் பண்ண போறேன் என்று சொல்ல ஆனந்த் மீனாட்சிக்கு பிடிக்காத கலரை தேர்வு செய்கிறான்.

அடுத்து நடக்க போவது என்ன

அதன் பிறகு ஐஸ்வர்யா அருணிடம் மூன்று புடவையை காட்டி கேட்க அவன் மூணு புடவையும் உன்ன விட அழகா தான் இருக்கு என்று சொல்லி பல்பு கொடுக்கிறான். அடுத்து தீபா கார்த்திக்கு மூன்று கலரில் புடவை அனுப்பி ஒன்றை தேர்வு செய்ய சொல்கிறாள்.

அடுத்து ப்ளூ கலர் சொல்லுங்க என்று மனதுக்குள் வேண்டி கொண்டே இருக்க கார்த்திக் பச்சை கலரை தேர்வு செய்து பல்பு கொடுக்கிறான். பிறகு ரமேஷ் ரம்யாவுக்கு ஒரு புடவையை தேர்வு செய்ய அவள் கடுப்பாகிறாள்.

அடுத்து கோவிலில் இவர்களை பார்க்கும் ரியா மறைவாக நின்று இந்த கல்யாணத்த நான் நடக்க விட மாட்டேன் என்று சபதம் எடுக்கிறாள். இதை தொடர்ந்து தீபா கையில் இருந்த புடவையை யாரோ கொள்ளையடித்து செல்ல தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.