Karthigai Deepam: ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்-karthigai deepam full episode today august 8 2024 indicates karthick plan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்

Karthigai Deepam: ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்

Aarthi Balaji HT Tamil
Aug 08, 2024 01:06 PM IST

Karthigai Deepam: மாப்பிள்ளையாக வந்த ரமேஷ், கார்த்திக்கு தெரிந்தவன் என்பது தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்தியை சந்தித்து நல்ல வேலை செய்தீங்க என்று நன்றி சொல்கிறான்.

ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்
ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய ( ஆகஸ்ட் 7 ) எபிசோடில் ரம்யாவை பார்க்க வந்த மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ஓகே சொல்லி ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அபிராமிக்கு வந்த சந்தேகம்

அதாவது, கார்த்திக், தீபா கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றாக நடக்க ஆனந்த் கல்யாண பத்திரிக்கை ரெடியாகி விட்டதாக சொல்லி கொண்டு வந்து கொடுக்க அபிராமி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள்.

இதையடுத்து தீபா பத்திரிகையை பார்க்கிறாள். கார்த்திக் மற்றும் நட்சத்திராவுக்கு திருமண பத்திரிகை அடித்த போது அதில் தீபா நட்சத்திரா பெயரை அடித்து விட்டு தனது பெயரை எழுதி அழகு பார்த்ததை நினைத்து பார்க்கிறாள்.

மாப்பிள்ளையாக வந்த ரமேஷ்

அடுத்து மாப்பிள்ளையாக வந்த ரமேஷ், கார்த்திக்கு தெரிந்தவன் என்பது தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்தியை சந்தித்து நல்ல வேலை செய்தீங்க என்று நன்றி சொல்கிறான்.

எப்படியாவது தடுக்க வேண்டும்

மேலும் இதெல்லாம் உங்க ஏற்பாடு தான் என்பது மட்டும் ரம்யாவுக்கு தெரிய வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார்.

அதன் பிறகு அபிராமி கோவிலுக்கு வர ரம்யாவும் பின் தொடர்ந்து வருகிறாள். அபிராமி பெண் சித்தரை சந்தித்து தாலியை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி விட்டாள் கல்யாணம் நல்லபடியா நடக்கும் என நினைக்க ரம்யா இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறாள்.

அடுத்து நடக்க போவது என்ன

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோட்

அபிராமி ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விட்டாள். ரம்யாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகை தர உள்ள நிலையில், மீனாட்சி, தீபா மைதிலி ஆகியோர் ரம்யாவை தயார் செய்கின்றனர். மாப்பிள்ளை ரமேஷ் வீட்டுக்கு வர, ரம்யாவை காபி கொண்டு போய் கொடுக்க சொல்ல, அவள் நான் ஒரு பெரிய கம்பெனியோட முதலாளி; நான் எப்படி இதெல்லாம் செய்வேன் என்று சொல்கிறாள்.

தீபா இதெல்லாம் காலம் காலமா இருந்துட்டு வர வழக்கம். அதை எல்லாம் நெனச்சதும் மாத்திட முடியாது என்று சொல்லி ரம்யாவிடம் காபியை கொடுத்து அனுப்புகிறாள். பிறகு ரம்யாவும் காபி கொண்டு வந்து கொடுக்க, ரம்யாவின் அப்பா மாப்பிள்ளையை பிடித்திருப்பதாக சொல்கிறாள். ரம்யா தனக்கும் பிடித்திருப்பதாக சொல்ல ரமேஷ் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுவான் என ரம்யா எதிர்பார்க்கிறாள். ஆனால் மாப்பிள்ளையாக வந்த ரமேஷ் எனக்கும் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொல்லி விட ரம்யா கடுப்பாகிறாள். இதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் சம்மதம் என்று சொல்லி தட்டை மாற்றிக் கொள்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.