காட்டு கத்து கத்தியும் கண்டுகொள்ளாத மக்கள்.. பாவ நிலையில் சூர்யா.. கங்குவா கலெக்ஷன் நிலவரம்
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் 11, 500 தியேட்டர்களில் வெளியாகியும் விடுமுறை தினத்தில் காத்து வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

காட்டு கத்து கத்தியும் கண்டுகொள்ளாத மக்கள்.. பாவ நிலையில் சூர்யா.. கங்குவா கலெக்ஷன் நிலவரம்
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
கங்குவா வசூல்
இந்நிலையில், கங்குவா படத்தின் வசூல் நிலவரம் குறித்து sancnilk.com எனும் வலைதளம் வெளியிட்ட தகவல்களைப் பார்ப்போம்.