கங்குவா படம் கடந்த நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. 

By Suguna Devi P
Nov 17, 2024

Hindustan Times
Tamil

இப்படம் முன்னதாக அக்டோபர் மாதம் வெளியாக இருந்த நிலையில் நவம்பர் மாதம் தள்ளிப் போடபட்டது. 

கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவிற்கு எந்த படமும் வெளியாக வில்லை. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கங்குவா பூர்த்தி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. 

இயக்குனர் சிறுத்தை  சிவாவுடன் சூர்யா இணையும் முதல் படம் இதுவாகும். பீரியட் படமாக உருவாகிய கங்குவா மக்களை முற்றிலும் ஏமாற்றி விட்டதாக பல விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

புஷ்பா படத்திற்காக தேசிய விருதை பெற்றிருந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் கங்குவா படத்திலும் இசையமைத்து இருந்தார. இவரது பின்னணி இசை சரியாக இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 

கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஓவர் பில்டப் பேச்சும் படத்தின் மீதான எதிர்மறையான விமர்சனங்களுக்கும் காரணமாகும். 

கங்குவா படம் குறித்து ஜோதிகா வெளியிட்டு இருக்கும் பதிவில், “இந்தப்பதிவை நான் சூர்யாவின் மனைவியாக எழுத வில்லை. மாறாக ஜோதிகாவாகவும், சினிமா காதலிப்பவளாகவும் எழுதுகிறேன். கங்குவா திரைப்படம் ஒரு சிறந்த சினிமா. சூர்யாவை நினைத்து பெருமை படுகிறேன். சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்லும் நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன். படத்தின் முதல் அரைமணிநேரம் வொர்க் அவுட் ஆகவில்லைதான். சவுண்டும் அதிகமாக இருந்தது' எனத் தெரிவித்து இருக்கிறார். 

கங்குவா படத்தில் இறுதியாக ஒரு கெஸ்ட் ரோலில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்த காட்சி மட்டுமே ரசிக்கும் படியாக இருந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். 

முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்