Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்

Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்

Marimuthu M HT Tamil
Sep 07, 2024 01:52 PM IST

Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்

Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்
Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்

கங்கனா ரனாவத், சமீபத்தில் தனது எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில், தனது இயக்கத்தில் தயாராகி வரும் ‘எமர்ஜென்ஸி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தணிக்கை குழுவின் சான்றிதழுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என்றும்; புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி எனவும் அறிவித்தார்.

1975ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அவசரநிலையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் த்ரில்லர் படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார், நடிகை கங்கனா ரனாவத். முதன்முறையாக இப்படத்தினை இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள, கங்கனா ரனாவத், இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

சீக்கிய சமூகம், தனது திரைப்படத்தின் சில பகுதிகளில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக உள்ள காட்சிகளை, தான் மறுப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.

எமர்ஜென்சி திரைப்படப் பணிகளும் வித்யா பாலனின் நடிப்பு ஆசையும்:

மேலும், கங்கனா ரனாவத், ’’எமர்ஜென்சி’’ படத்தின் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே, 2018ஆம் ஆண்டில், பத்திரிகையாளர் சகரிகா கோஷின் புத்தகமான ‘’இந்திரா: இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பிரதமர்’’ என்னும் புத்தகத்தின் உரிமையை நடிகை வித்யா பாலன் வாங்கியிருந்தார்.

மேலும், இந்திரா காந்தியாக திரையில் நடிக்கவேண்டும் என்பது தனது நீண்டகால கனவு என்று நடிகை வித்யா பாலன் கூறினார். அப்படத்தை வித்யா பாலனின் கணவர் சித்தார்த் ராய் கபூர், தனது ராய் கபூர் பிலிம்ஸ் பதாகையின்கீழ் தயாரிப்பதாகவும் இருந்தது.

2019ஆம் ஆண்டில், Firstpost உடனான நேர்காணலில், வித்யா பாலன் இந்திரா காந்தி திரைப்படம் பற்றிய இரண்டு அறிவிப்புகளை சொன்னார். அதில் ஒரு திரைப்படத்திற்கு பதிலாக, இந்திரா காந்தியின் வாழ்க்கையை வலைத்தொடராக மாற்ற திட்டமிடப்பட்டது என்றும்; அதை ‘ தி லஞ்ச்பாக்ஸ்’ புகழ் இயக்குநர் ரிதேஷ் பத்ரா இயக்க இருப்பதாக தகவல் கூறினார்.

வெப்சீரிஸில் நடிக்கப்போகும் வித்யா பாலன்:

மேலும் நடிகை வித்யா பாலன், "இந்திரா காந்தி வெப் சீரிஸ் நான் விரும்பியதைவிட அதிக நேரம் எடுக்கிறது. அவர்கள் வெப் சீரிஸுக்காக ஸ்கிரிப்டை மீண்டும் எழுதுகிறார்கள். விரைவில் இறுதி பதிப்புடன் என்னிடம் வருவார்கள். வெப் சீரிஸ் என்பது ஒரு வித்தியாசமான விளையாட்டாகும். எனவே இது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்"என்றும் நடிகை வித்யா பாலன் கூறினார்.

நடிகை வித்யா பாலன்,"ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இறுதியில் உரிய அனுமதி கிடைக்காவிட்டால் என்னால் படம் எடுக்க முடியாது என்று அவர்களிடம் கூறினேன். ஆனால், வெப் சீரிஸில் இது மிகவும் எளிதானது" என்று கூறினார்.

அதே நேர்காணலில், ஏ.எல்.விஜய் இயக்கிய ’தலைவி’ படத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தது ஏன் என்பதை வித்யா பாலன் வெளிப்படுத்தினார். அதில் இந்திரா காந்தியாக நடிக்க ஏற்கனவே தயாராகி வருவதால், ஒத்த வயதுடைய இரண்டு அரசியல் பிரமுகர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கவிரும்பவில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், தலைவி (2021) மற்றும் எமர்ஜென்சி ஆகிய படங்களில் முறையே ஜெயலலிதா மற்றும் இந்திரா காந்தி ஆகிய இரண்டு பேரின் வேடங்களிலும் கங்கனா ரனாவத் நடித்தார். எமர்ஜென்சி படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும், கங்கனாவின் மணிகர்னிகா பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கின்றன என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.