தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidya Balan Breakup:'என் முதல் காதலன் என்னை அப்படி செய்தான்': போட்டுடைத்த வித்யா பாலன்

Vidya Balan BreakUp:'என் முதல் காதலன் என்னை அப்படி செய்தான்': போட்டுடைத்த வித்யா பாலன்

Marimuthu M HT Tamil
Apr 13, 2024 09:04 PM IST

Vidya Balan BreakUp: வித்யா பாலன் ஒரு புதிய நேர்காணலில் தனது முதல் காதல் மற்றும் அது எவ்வாறு மோசமாக முடிந்தது என்பதைப் பற்றி பேசியுள்ளார்.

Vidya Balan BreakUp:'என் முதல் காதலன் என்னை அப்படி செய்தான்': போட்டுடைத்த வித்யா பாலன்
Vidya Balan BreakUp:'என் முதல் காதலன் என்னை அப்படி செய்தான்': போட்டுடைத்த வித்யா பாலன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியன் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சிக்கு நடிகை வித்யா பாலன் அளித்த பேட்டியில், தன்னுடைய இளம் வயதில், ஒருவர் தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக வித்யா பாலன் கூறியுள்ளார்.

அதில்,  "நான் என் முதல் காதலில் ஏமாற்றப்பட்டேன். அவர் ஒரு ** என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். காதலர் தினத்தன்று நாங்கள் பிரிந்தோம். நான் அவரை முதன்முதலில் எங்கள் கல்லூரியில் தான் சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். அப்போது திடீரென்று என்னிடம் வந்த அவர் தன் முன்னாள் காதலியை சந்திக்கப் போகிறேன் என்று கூறினார். நான் அப்போது அவர் மீது மிகுந்த காதலில் இருந்தேன். அவ்வாறு இருந்தும் என்னை அவர் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்தார். என் முதல் காதலன் என்னை அப்படி செய்தான். ஆனால், நான் அப்போது இருந்ததை விட, தற்போது சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன், "என்று வித்யா பாலன் கூறினார்.

வித்யா பாலன், கடந்த 2012ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை மணந்தார். ஆனால், முன்பு நடிகர் ஷாஹித் கபூருடன் வித்யா பாலன் டேட்டிங் செய்ததாகவும் வதந்தி பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன், தனது இளங்கலை சமூகவியல் பட்டப்படிப்பை, மும்பையின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். முதுகலைப் பட்டத்தை மும்பையில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வித்யா பாலன் யார்?:

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்தவர், வித்யா பாலன். ஆரம்பத்தில் ரன் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி, பின் அதில் இருந்து தூக்கப்பட்டார். அதன்பின், இந்திக்கு சென்ற அவர் பல ஹிட் படங்களில் நடித்த பின், தமிழில் மணிரத்னத்தின் குரு படத்தில் நடித்தார். பின், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘டர்ட்டி பிக்ஸர்’என்னும் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர், வித்யா பாலன்.

வித்யா பாலன் நடிக்கும் புதிய படங்கள்:

வித்யா பாலன் அடுத்து பிரதிக் காந்தியுடன் சேர்ந்து ’தோ அவுர் தோ பியார்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். மேலும், பூல் புலைய்யா இந்தி படத்தின் மூன்றாம் பாகத்திலும் வித்யா பாலன் காணப்படுவார். 

பி.டி.ஐ.க்கு தனது சினிமா பிரவேசம் குறித்து வித்யா பாலன் அளித்த பேட்டியில், ‘’2007 ஆம் ஆண்டு, நான் பிரியன் சாரை (பிரியதர்ஷன்) சந்திக்கச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. அவர் மும்பையில் சன்னி தியோலுடன் ஒரு விளம்பரத்தை படமாக்கிக் கொண்டிருந்தபோது, 'நீங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னை சந்திக்க முடியுமா?' என்று கேட்டார். நான் சிறுவயதில் 'மணிச்சித்ரதாழ்' (1993) என்ற அசல் மலையாளப் படத்தைப் பார்த்திருக்கிறேன். நான் அப்படத்தில் நடித்த ஷோபனாவை நேசித்திருக்கிறேன். ஆனால், நான் அவரைக் கண்டு பயந்தேன். அதன்பின், நான் மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

ஆனால், அவர் எனக்கு அந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வழங்கியபோது, 'ஆஹா, நீங்கள் அந்த படத்தை எனக்கு வழங்குகிறீர்களா?' என்று நான் கேட்டேன். அதன்பின், நான் உடனடியாக ஆம் என்று சொன்னேன். ஒரிஜினல் பார்த்ததால் ஸ்கிரிப்ட் எனக்கு எதுவும் தேவையில்லை என்றேன். இது ஒரு படத்திற்காக நான் நடத்திய மிகக் குறுகிய சந்திப்பாக இருக்கலாம். ஒரு படத்திற்கு ஆம் என்று சொல்ல நான் எடுத்த குறுகிய நேரம் அதுதான். ஏனென்றால் நான் மலையாளத்தில் அதன் மூலவெர்ஷனை மிகவும் ரசித்திருக்கிறேன் "என்று நடிகை வித்யா பாலன் கூறினார்.

அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ள பூல் புலைய்யா 3 படத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் நடித்துள்ளனர். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்