Sridevi Marriage: மகளை திருமணம் செய்ய கோரிய ஸ்ரீதேவி தாயார்! மறுப்பு சொன்ன கமல் - இப்படியும் ஒரு காரணம்
Sridevi Kamal Marriage: கமல்ஹாசன் தனது மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்ய வேண்டும் என விரும்யுள்ளார் அவரது தாயார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்ததுடன், அவர் அதற்கான காரணத்தையும் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஜோடியாக கமல்ஹாசன் - ஸ்ரீதேவி ஆகியோர் இருந்துள்ளார்கள். ரெமாண்டிக் ஜோடி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, கமல்ஹாசனை தனது மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நடிகை ஸ்ரீதேவியின் தாயார் விரும்பியுள்ளாராம்.
திருமணத்துக்கு கமல் மறுப்பு
தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக இருந்தாலும், நிஜத்தில் கமல் - ஸ்ரீதேவி ஆகியோர் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். ஸ்ரீதேவியின் தாயார் கமலிடம் தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாராம். பலமுறை கமலிடம் இதுபற்றி பேசியபோதிலும் விடாப்படியாக மறுப்பு தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஸ்ரீதேவியை தனது குடும்பத்தின் ஒரு நபராக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளாராம்.
