பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா

பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா

Marimuthu M HT Tamil
Dec 21, 2024 05:38 PM IST

பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா குறித்துப் பார்ப்போம்.

பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா
பாலா 25 நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை.. சுத்துப் போட்ட பத்திரிகையாளர்கள்.. உதயநிதி புகழ்பாடிய ஆர்யா

அதில், ‘’பாலா சார் விழாவில் நான் கலந்துகொள்ளமுடியவில்லை. அப்போது அவுட்டோர் சூட்டிங்கில் இருந்தேன். பாலா சார் பெர்ஷனலாக அழைச்சிருந்தார்.

என்னால் வரமுடியவில்லை. சார்பட்டா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்குகிறது. சினிமாவில் பார்ட் 2 வந்து எப்பவுமே வந்து அழுத்தமாக இருந்திடணும்.

பார்ட் 1 நன்றாக ஓடினால், பார்ட் 2வில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகும். பார்ட் 1 நன்றாக ஓடியிருச்சு என்றால் பார்ட் 2வை ரீச் செய்றது ஈஸி. ஒரு பெரிய ஓப்பனிங் கிடைக்கும். ஆனால், அதெல்லாம் மீறி, அந்தப்படம் நல்லாயிருந்தால்தானே ஓடப்போகுது. கண்டிப்பாக வந்து பார்ட் 2 என்பது ஒரு நல்ல விஷயம் தான்.

ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் உதயநிதி சார், எனக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்: ஆர்யா

நான் அடிப்படையில் வந்து ஸ்போர்ட்ஸ் மேன் தான். ஸ்கூலில் இருந்து ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளில் தான் பண்ணியிட்டு இருப்பேன். அது என்னோட லைஃபில் ஒரு பழக்கம் மாதிரி ஆகிப்போச்சு. கண்டிப்பாக ஸ்போர்ட்ஸ் மேனாக இருப்பது பிடிச்சிருக்கா, இல்லை, ஹீரோவாக இருக்கிறது பிடிச்சிருக்கா என்றால், ரெண்டுமே தான் பிடிச்சிருக்கு.

ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் உதயநிதி சார், எனக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து பயணிப்பது பெருமையாக உள்ளது.

சினிமாவுக்காக, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறையுடன் இருக்கும் கோச்சிங் செய்யும் நபர்களுடன் இணைந்து பணியாற்றுவோம். அதற்குண்டான ரிசல்ட் இரண்டு மற்றும் மூன்று மாதங்களில் நன்கு தெரியும்.

நான் தமிழ்நாடு விளையாட்டுத்துறையின்கீழ் இருக்கும் நேரு ஸ்டேடியத்தில் போய் பிராக்டீஸ் செய்யும்போது, தெரிந்த விஷயம் என்னவென்றால் அவ்வளவு போட்டி மனப்பான்மையுடன்கூடிய விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அங்கு நான் பார்த்த நபர்கள் எல்லோரும் ரொம்ப உயர்தர மதிப்பில் விளையாட்டுத்துறையில் தொடர்ச்சியாக பிராக்டீஸில் இருப்பவர்கள். தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் ஒலிம்பிக்ஸுக்கு தயார் ஆகும் வகையில் அங்கு பயிற்சி கொடுக்குறாங்க. கண்டிப்பாக, பெட்டரான வசதிகள் இருந்தது என்றால் கண்டிப்பாக மெடல் அடிப்பாங்க.

விமர்சனம் என்பது இயற்கையானது: ஆர்யா

விமர்சனம் என்பது ஒரு இயற்கையான விஷயம். அப்படி பண்ணக்கூடாது. இப்படி பண்ணக்கூடாதுன்னு சொல்லக் கூடாது. படம் நன்றாக இருந்தால் அது திரையரங்கில் ஓடும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை உடன் இணைந்து பயணிப்பது பெருமையாக உள்ளது. அவங்க லோகோவை நான் என்னுடைய ஜெர்சியில் பயன்படுத்துறது அவங்க எனக்கு பே பண்றாங்க அப்படியெல்லாம் கிடையாது. அதைப் பயன்படுத்துறது ரொம்பப் பெருமையாக நினைக்கிறேன்.

ஒலிம்பிக்ஸ் மாதிரி, தமிழ்நாட்டில் சி.எம். டிராபி ஒன்று நடத்தினாங்க. அது ரொம்ப புரொபஷனலாக, அந்த வயது ஒத்தவங்ககிட்ட செய்தது நம்ம தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தில் தான். அப்படி ஒரு ஊக்கமான நிகழ்வுகள் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறையில் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம், இணைந்து ஒரு நிகழ்வு செய்வது என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் பெருமை.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை என்பது தனியான துறை. அந்த துறை சார்பாக, தங்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், அந்த லோகோவை பயன்படுத்திறது அஜித் சாருக்கு மட்டுமில்லை, எனக்கும் தான் பெருமையான விஷயம்’’ என்றார், நடிகர் ஆர்யா.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.