Manimegalai Vs Priyanka:பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம்.. கண்டித்த கமல்ஹாசன்.. செய்யாறு பாலு பகீர்-journalist on kamal haasan who criticized vijay tv management for supporting priyanka comment by cheyyaru balu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manimegalai Vs Priyanka:பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம்.. கண்டித்த கமல்ஹாசன்.. செய்யாறு பாலு பகீர்

Manimegalai Vs Priyanka:பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம்.. கண்டித்த கமல்ஹாசன்.. செய்யாறு பாலு பகீர்

Marimuthu M HT Tamil
Sep 19, 2024 05:05 PM IST

Manimegalai Vs Priyanka: பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம் குறித்தும், அதைக் கண்டித்த கமல்ஹாசன் குறித்தும் செய்யாறு பாலு பகீர் பேட்டியளித்துள்ளார்.

Manimegalai Vs Priyanka:பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம்.. கண்டித்த கமல்ஹாசன்.. செய்யாறு பாலு பகீர்
Manimegalai Vs Priyanka:பிரியங்காவுக்கு ஆதரவாக இருக்கும் விஜய் டிவி நிர்வாகம்.. கண்டித்த கமல்ஹாசன்.. செய்யாறு பாலு பகீர்

இதுதொடர்பாக தனது யூட்யூப் சேனலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், ‘’குக் வித் கோமாளி பிரியங்கா, மணிமேகலை பிரச்னை தீரவில்லையா என்றால், தீரவில்லை தான். இன்னும் இந்தப் பிரச்னை போய்க்கொண்டே இருக்கு. சோசியல் மீடியாவில் பிரியங்காவுக்கு இன்னும் ஆதரவு கிடைக்குமுன்னு பார்த்தால் வைச்சு அடிச்சு துவைச்சிட்டு இருக்காங்க. மணிமேகலைக்கு ஆதரவு பெருகுது.

தொடர்ச்சியாக ஒரு வீடியோ கட் செய்து போட்டிருக்காங்க. பிக்பாஸ் சமயத்தில் போட்டியாளராக பிரியங்கா இருந்தபோது, அங்கு அவர் செய்த அரசியல் என்ன என்பது பற்றி அந்த வீடியோ காட்டியது.

பிரியங்காவை அன்றே விமர்சித்த நிரூப்

குறிப்பாக நிரூப் பேசிய வீடியோ தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கு. அவர் என்ன சொல்றார், பிரியங்காவை, நீ வந்து ஒரு சுயநலவாதி. என்னவேணுமென்றாலும் செய்வ, மத்தவங்க கஷ்டத்தை ஆறுதல் சொல்றமாதிரி போய்ட்டு, ரசிக்கக்கூடிய நபர், அப்படின்னு சொல்றார். அந்த வீடியோவை பார்த்ததும் நமக்கே இவங்க பொம்பளை ரகுவரனோ அப்படின்னு சொல்லத்தோன்றுது.

இதையெல்லாம் மீறி, உனக்கொரு பிரச்னை என்றால், பிரச்னைக்குக் காரணமானவர்களை சாக்கடைக்குள் தள்ளி, அதை வந்து மூடிடுவ அப்படின்னு நிரூப் சொல்ற வீடியோ பரவலாகப் போய்கிட்டிருக்கு.

விஜய் டிவி சேனலின் நிர்வாகம் பிரியங்காவுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுக்கிறாங்க, அப்படின்னு சொல்றாங்க.

பிரியங்கா திறமையான தொகுப்பாளினி. அதைத்தாண்டி, அவங்களுக்காக ஒரு பாலிடிக்ஸை பண்றாங்க இல்லையா, அதற்கு ஆதரவுக்கரம் காட்டுவது விஜய் டிவியின் நிர்வாகம். அதில் இருக்கும் முக்கிய நபர்கள். இந்தப்பொண்ணை மட்டும் ஏன் இப்படி வளர்க்குறீங்க. மற்றவர்களை ஏன் இப்படி நசுக்குறீங்கன்னு கேள்வி இருக்கு.

விஜய் டிவியை கண்டித்த கமல்ஹாசன்:

பிக்பாஸில் தாமரை என்னும் போட்டியாளரை அதிகமாக டார்கெட் செய்தது, பிரியங்கா தான். அப்போது விஜய் டிவி சேனல் நிர்வாகம், பிரியங்காவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக்கப் பரிந்துரைத்ததாகவும், அது தெரிந்து கமல்ஹாசன் வார்னிங் கொடுத்ததாகவும் ஒரு தகவல். மக்கள் செல்வாக்கில் இருக்கிறவங்களை மீறி ஒருத்தரை கொண்டு வந்தீர்கள் என்றால், உண்மையைப் போட்டு உடைச்சிருவேன் என எச்சரித்து இருக்கிறார், கமல்ஹாசன்.

ஆனாலும் விடல, பிரியங்காவை ரன்னர் ஆக கொண்டு வந்து, அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை முடிச்சாங்க. தன்னுடைய இருப்பிடத்தைத் தக்க வைக்க என்ன பாலிடிக்ஸில் வேண்டுமென்றாலும் பலரும் ஈடுபடுவர். ஆனால், பிரியங்கா செய்யும் பாலிடிக்ஸ் பெருசு. குக் வித் கோமாளி சீசன் 5-ல் நுழைந்தவுடன், ஏறத்தாழ இர்பான் போன்றோருடன் பழகி, டான் மாதிரி ஆகிட்டாங்க. பலரும் பிரியங்காவுக்கு ஜால்ரா தட்ட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனால், மணிமேகலை மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பிரியங்காவுக்கு ஆதரவாகப் பேசலை. இது பிரியங்காவுக்கு எரிச்சல் உண்டாக்கியிருக்கு.

காலேஜில் படித்துமுடித்து போய்விட்டு, வேலைகிடைக்காமல் மீண்டும் வந்து கல்லூரிக்குள் தன் அதிகாரத்தைக் காட்டும் நபராகத்தான் பிரியங்காவை தெரியுது என தகவல் வெளியாகியுள்ளது. இது எல்லாம் மீறி, மணிமேகலை சுயமரியாதையை கையில் எடுத்தது தான், அவருக்கு மிகப்பெரிய பலமாக மாறியிருக்கு.

டி.ஆர்.பி.நாடகம்:

ஆனால், சிலர் இது எல்லாம் சேனல்காரர்களின் விளையாட்டு. டி.ஆர்.பியை ஏற்ற செய்யும் தந்திரம் என சொல்கின்றனர். குறிப்பாக, குக் வித் கோமாளிக்கு போட்டியாக, டாப்பு குக் டூப் குக்குன்னு ஒரு நிகழ்ச்சி வந்தாச்சு. அதை டம்மி பண்றதுக்காக இப்படி பண்றாங்க அப்படிங்கிற தகவல் சமூக வலைதளங்களில் போய்க்கொண்டு இருக்கு.

இன்னொரு பக்கம், அக்டோபர் மாதம் முதல்வாரம், கமல்ஹாசன் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி நடக்கப்போகுதுன்னு விஜய் டிவி நிர்வாகம் பார்த்துட்டு இருக்காங்க. குறிப்பாக, விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி கொண்டுபோகப்போறார் என்றும், பிக்பாஸ் 8-க்குள் மணிமேகலையை அனுப்புவதற்காகத்தான் இப்படி ஒரு தகவலும் காத்துவாக்கில் வந்திருக்கு.

ஏன் அப்படி என்றால், நமது மீடியா நண்பர் ஒருவர் பிக்பாஸில் நுழைய முயற்சிசெய்யும்போது, பரபரப்பாக உங்களைப் பற்றி இரண்டு மூன்று நாட்கள் சோசியல் மீடியாவில் பேசுறமாதிரி பண்ணுங்கன்னு சொல்லவும். அவர் இது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு கடந்துபோயிட்டார். இந்த விஷயம் தான், கூல் சுரேஷுக்கும் நடந்திருக்கு. அவர் அதை செய்துகாட்டினார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான், தொகுப்பாளினிக்கு கூல் சுரேஷ் மாலை போட்டது. அப்போது பார்த்தால் ஒரு இரண்டு மூன்று நாட்கள் கூல் சுரேஷ் தான் ட்ரெண்டிங்கில் இருந்தார். அப்படி தான் மணிமேகலையை தயார் பண்ணுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மணிமேகலை பிக்பாஸ்க்குள் செல்கிறாரா?:

மணிமேகலை அப்படி பிக்பாஸ்க்குப் போனால் இப்போது இருக்கும் சோசியல் மீடியா ஆதரவு, அவருக்கு இருக்காது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா கிட்ட கேட்கும்போது, எங்குதான் குரூப்பிஸம் இல்லை, அப்படின்னு கடந்து போயிடுறாங்க.

குக் வித் கோமாளியில் இருக்கும் பூஜா, பிரியங்காவுக்கு ஆதரவாகப் பேசுறாங்க. இவ்விவகாரத்தில் உண்மைத்தன்மை இன்னும் சிலநாட்களில் தெரிந்துவிடும்'' என்றார்.

நன்றி: செய்யாறு பாலு யூட்யூப் சேனல்

பொறுப்பு துறப்பு:

இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.