சும்மா ஊதக்கூடாது ஜோதிகா;திஷா பதானி அங்க என்ன?..இது பெண் இனத்த பெருமை படுத்துற விஷயமா? - பிரபலம் வைத்த சரமாரி கேள்விகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சும்மா ஊதக்கூடாது ஜோதிகா;திஷா பதானி அங்க என்ன?..இது பெண் இனத்த பெருமை படுத்துற விஷயமா? - பிரபலம் வைத்த சரமாரி கேள்விகள்

சும்மா ஊதக்கூடாது ஜோதிகா;திஷா பதானி அங்க என்ன?..இது பெண் இனத்த பெருமை படுத்துற விஷயமா? - பிரபலம் வைத்த சரமாரி கேள்விகள்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 18, 2024 10:38 PM IST

ஜோதிகா சொல்கிறார், அரை மணி நேரம் படம் நன்றாக இல்லை தான்என்று.. அப்படியானால் அது தொடர்பான காட்சிகள் எதற்கு? அதனை படத்தில் இருந்து தூக்கி விட வேண்டியதுதானே.. சும்மா ஊதக்கூடாது- ஜோதிகாவிற்கு சரமாரி கேள்வி!

சும்மா ஊதக்கூடாது ஜோதிகா;திஷா பதானி அங்க என்ன?..இது பெண் இனத்த பெருமை படுத்துற விஷயமா? - பிரபலம் வைத்த சரமாரி கேள்விகள்
சும்மா ஊதக்கூடாது ஜோதிகா;திஷா பதானி அங்க என்ன?..இது பெண் இனத்த பெருமை படுத்துற விஷயமா? - பிரபலம் வைத்த சரமாரி கேள்விகள்

விமர்சனம் அளவுகோல்

அதில் அவர் பேசும் போது, “விஜய் நடித்த கோட் படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் எழவில்லையா? அஜித் நடித்த விவேகம் திரைப்படத்திற்கு எதிராக விமர்சனங்கள் வரவில்லையா? இங்கு எல்லா பெரிய திரைப்படங்களின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. விமர்சனத்தை பொருத்தவரை, பெரிய படம், சின்ன படம் என்பது இல்லை இங்கே அளவுகோல். இந்த திரைப்படம் மக்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பதுதான் இங்கு கேள்வி.

ஜோதிகா
ஜோதிகா

நீ மக்களிடம் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாய். அதை நம்பி அவன் திரையரங்கிற்கு வந்தான். அவனை இந்த திரைப்படம் சந்தோஷப்படுத்தியதா இல்லையா என்பதே கேள்வி. அந்த அடிப்படையில் தான் இங்கு விமர்சனமே தவிர... பெரிய படத்திற்கு விமர்சனம் இல்லை? சின்ன படத்திற்கு விமர்சனம் செய்கிறார்கள்.. சூர்யா படத்தை விமர்சனம் செய்கிறார்கள் என்பது அல்ல... பணம் கொடுத்து படம் பார்க்க வந்த ரசிகன், படம் பிடிக்காமல் வெளியே வந்து கதறுகிறான்.

அவனுக்கு உங்களுடைய பதில் என்ன..? உங்களுடைய ஆறுதல் என்ன…?.. ஜோதிகா சொல்கிறார், அரை மணி நேரம் படம் நன்றாக இல்லை தான்என்று.. அப்படியானால் அது தொடர்பான காட்சிகள் எதற்கு? அதனை படத்தில் இருந்து தூக்கி விட வேண்டியதுதானே. அப்படி என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அதையும் மக்கள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதானே அர்த்தம்.

கங்குவா
கங்குவா

பெரிய படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், பெண்களை பின் தொடர்வது போன்ற காட்சிகள் இருந்ததாக ஜோதிகா குற்றம் சாட்டுகிறார். அப்படி என்றால் கங்குவா என்ன பெண்களை பெருமைப்படுத்துகிற படமா…? அங்கு திஷா பதானி என்ன விதமான ஆடை அணிந்து இருக்கிறார். அவர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்.. பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தது போல திஷா பதானி ஏதாவது செய்து இருக்கிறாரா? இதையெல்லாம் தெரிந்து கொண்டு, நீங்கள் ஒரு படத்தை பற்றி இப்படி பேசுவது என்பது சும்மா ஊதுவது போல இருக்கிறது. ஜோதிகா இதனை சூர்யாவின் மனைவியாக சொல்லவில்லை என்று கூறுகிறார். அதெல்லாம் சுத்த பொய். அவர் அவரது மனைவியாகத்தான் அதை சொல்லி இருக்கிறார்” என்று பேசினார்.

முன்னதாக, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா; பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி படத்தின் நாயகியாக நடித்திருந்தார். அனிமல் படத்தின் வில்லன் நடிகர் பாபி தியோல், ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “இந்தப்பதிவை நான் சூர்யாவின் மனைவியாக எழுத வில்லை. மாறாக ஜோதிகாவாகவும், சினிமா காதலிப்பவளாகவும் எழுதுகிறேன். கங்குவா திரைப்படம் ஒரு சிறந்த சினிமா. சூர்யாவை நினைத்து பெருமை படுகிறேன். சினிமாவை முன்னோக்கி கொண்டு செல்லும் நடிகராக நீங்கள் இருக்கிறீர்கள். உண்மையாகச் சொல்கிறேன். படத்தின் முதல் அரைமணிநேரம் வொர்க் அவுட் ஆகவில்லைதான். சவுண்டும் அதிகமாக இருந்தது.

இந்திய திரைப்படங்களில் தவறுகள்

பெரும்பான்மையான இந்திய திரைப்படங்களில் தவறுகள் நடப்பது என்பது ஒரு அங்கமாக இருக்கிறது. ஆக, இதுதான் உண்மை. ஆனால் இது 3 மணி நேர திரைப்படத்தில் வெறும் 1/2 மணி நேரம் மட்டுமே.. ஆனால் உண்மையாக இந்தத்திரைப்படம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். படத்தின் ஒளிப்பதிவும், அதனை மெருகேற்றிய விதமும், இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒன்று. ஆனால், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளன. காரணம், இதற்கு முன்னதாக ஒரு பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், இரட்டை அர்த்த வசனங்களில் பேசுதல், அளவுக்கு அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இடம் பெறச்செய்தல் உள்ளிட்டவை இடம் பெற்ற அறிவற்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு இந்த அளவிலான நெகட்டிவ் விமர்சனங்கள் வரவில்லை.

2ம் பாதியில்

கங்குவாவின் பாசிட்டிவான விஷயங்களை பார்க்கும் போது, 2 ஆம் பாதியில் இடம் பெற்ற பெண்களின் ஆக்‌ஷன் காட்சி, கங்குவாவிடம் சிறுவன் செலுத்தும் அன்பு மற்றும் இழைக்கும் துரோகம் உள்ளிட்டவற்றை விமர்சனத்தில் சொல்ல மறந்து விட்டார்கள். விமர்சனங்களை பார்க்கும் போது, இனி இதையெல்லாம் பார்க்க வேண்டுமா? படிக்க வேண்டுமா? நம்ப வேண்டுமா என்று தோன்றுகிறது.

முதல் நாளிலேயே கங்குவா திரைப்படத்திற்கு இப்படியான நெகட்டிவிட்டியை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்லப்போனால், முதல் காட்சி முடிவதற்குள்ளாகவே சில குழுக்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு படக்குழு எடுத்திருக்கும் முயற்சி ஆச்சரியப்பட வைக்கிறது. கங்குவாவை உருவாக்கிய நீங்கள் பெருமிதத்தோடு இருங்கள். எதிர்மறையான கருத்துக்களை வெளியிடுபவர்கள் சினிமாவிற்காக வேறு எதனையும் செய்யவில்லை” என்று பதிவிட்டு இருந்தார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.