Jennifer Lopez: 4வதும் போச்சு... என்னால தாங்க முடியல... குடியின் பிடியில் நடிகை...-jennifer lopez divorced her 4th husband and addicted drug - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jennifer Lopez: 4வதும் போச்சு... என்னால தாங்க முடியல... குடியின் பிடியில் நடிகை...

Jennifer Lopez: 4வதும் போச்சு... என்னால தாங்க முடியல... குடியின் பிடியில் நடிகை...

Malavica Natarajan HT Tamil
Sep 22, 2024 01:27 PM IST

Jennifer Lopez: பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் தனது 4வது கணவரை பிரிந்து வாழும் சோகம் தாங்க முடியாமல் குடிக்கு அடிமையாகி வருவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Jennifer Lopez: 4வதும் போச்சு... என்னால தாங்க முடியல... குடியின் பிடியில் நடிகை...
Jennifer Lopez: 4வதும் போச்சு... என்னால தாங்க முடியல... குடியின் பிடியில் நடிகை...

இவருக்கு தற்போது 55 வயது ஆகிறது. இவர் கடந்த 2022ம் ஆண்டு பென் அஃப்லெக்கை திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன் அவர் 3 முறை திருமணமாகி அதிலிருந்து விவாகரத்தும் பெற்றுள்ளார். தற்போது ஜெனிபர் லோபஸ்- பென் அஃப்லெக்கின் திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது.

ஜெனிபர் லோபஸ்- பென் திருமணம்

ஜெனிபர் லோபஸ்- பென் அஃப்லெக்கை விரும்பி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும் என இவர்கள் இருவரின் நண்பர்களும் கூறி வந்தனர். அதற்கு தகுந்தார் போல் இருவரும் இஷா அம்பானியின் பங்களாவை பல 100 கோடிக்கு வாங்கிக் கொண்டு அங்கு குடியேறினர். ஆனால், இத்தம்பதிக்கு திடீரென என்ன ஆனதென்றே தெரியவில்லை. இருவருக்குள்ளும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தவாறே இருந்து வந்துள்ளது. இதனால், சில நாட்கள் இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.

விவாகரத்து கோரிய ஜெனிபர்

இந்நிலையில், பென் அப்லெக்கிடமிருந்து விவாகரத்து வேண்டுமென ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெனிபரே விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருந்தாலும் தற்போது அவர் பென் அஃப்லெக்கை பிரிய மனமில்லாமல் தவித்து வருகிறாராம். 

மனுத்தாக்கல் செய்த பிறகு மனம் மாறிய ஜெனிஃபர் பென்னிடம் நாம் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் பென்னோ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் உச்சக்கட்ட விரக்தி அடைந்த ஜெனிபர் லோபஸ் தினமும் கண் மூடித் தனமாக மது அருந்தி வருகிறாராம். அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை எனவும் இவரது நண்பர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

புகழின் உச்சியில் ஜெனிபர் லோபஸ்

அமெரிக்காவின் டெலிவிஷன் சீரிஸான ஸ்கெட்ச் காமெடி-யில் டான்ஸராக தனது கரியரை ஆரம்பித்தவர் ஜெனிபர் லோபஸ். அதில் அவரின் அழகையும் திறமையையும் கண்டு ஒட்டுமொத்த ஹாலிவுட் இவரை திரும்பி பார்க்க வைத்தது. செலினா, அனகோண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து ஹாலிவுட் மட்டுமின்றி பிற நாட்டு ரசிகர்களையும் கவர சேர்க்க ஆரம்பித்தார். 

தொடர்ந்து பல படங்களில் ரசிகர்கள் பலரை கட்டிப்போட்ட ஜெனிபர் இசையிலும் ஆர்வம் உடையவர். இவர் நிறைய ஆல்பங்களையும் பாடி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெனிபர் லோபஸ் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரால் திருமண பந்தத்தில் சரியாக இருக்க முடியவில்லை என அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.