Jayam Ravi: ஆர்த்தி மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா..கல்யாணம் எதுக்கு பண்றோம்? -ஜெயம் ரவி பளார் பதில்!-jayam ravi throwback interview about why he married his wife aarti ravi what his point of you about marraige - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi: ஆர்த்தி மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா..கல்யாணம் எதுக்கு பண்றோம்? -ஜெயம் ரவி பளார் பதில்!

Jayam Ravi: ஆர்த்தி மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா..கல்யாணம் எதுக்கு பண்றோம்? -ஜெயம் ரவி பளார் பதில்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 30, 2024 10:02 AM IST

Jayam Ravi: நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. - ஜெயம் ரவி பளார் பதில்!

Jayam Ravi: ஆர்த்தி மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா..கல்யாணம் எதுக்கு பண்றோம்? -ஜெயம் ரவி பளார் பதில்!
Jayam Ravi: ஆர்த்தி மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா..கல்யாணம் எதுக்கு பண்றோம்? -ஜெயம் ரவி பளார் பதில்!

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி கல்யாணத்தை பற்றிய அவரது பார்வையையும், மனைவி ஆர்த்தி குறித்தும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருந்தார்.

 

மனைவி ஆர்த்தியுடன் ஜெயம்ரவி
மனைவி ஆர்த்தியுடன் ஜெயம்ரவி

இது குறித்து அவர் பேசும் போது, “ஆர்த்தி மட்டும் என்னுடைய வாழ்க்கைக்குள் வரவில்லை என்றால், என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்திருக்காது. நம்முடைய வாழ்க்கையில் கல்யாணம் என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாக இருக்கிறது அப்படிப்பட்ட ஒரு அங்கத்தை நாம் ஏன் செய்கிறோம் என்ற கேள்வி இங்கு முக்கியமானது.

அந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு படத்தில் வந்த வசனம் என்னை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அதில், நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பதை நீ சொல்லக்கூடாது. ஏனென்றால் நீ உனக்கு ஆதரவாக பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உன் உடன் இருப்பவர்கள் தான் நீ எப்படி வாழ்ந்து இருக்கிறாய் என்பது குறித்து சொல்ல வேண்டும். அவர்கள் தான் நீ எப்படிப்பட்டவன் நீ எப்படியான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாய் என்பதை கூற வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் அந்த பதிலுக்கான பிரதிபலிப்பு என்னுடைய மனைவி ஆர்த்தி தான். வேறு யாரும் அதனை சொல்லவே முடியாது. இதற்காகத்தான் நாம் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அதுதான் வாழ்க்கையானது அர்த்தமுள்ளதாக மாறுகிறது.” என்று பேசினார்.

காதல் திருமணம்

ஆர்த்தியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் ஜெயம் ரவி. பின், ஜெயம் ரவியின் திரைப்படப் பணிகளில் ஆர்த்தி மற்றும் அவரது குடும்பம் நுழைந்தது. ஜெயம்ரவியின் பெரும்பாலான படங்களை ஆர்த்தியின் தாயார் தான் வெளியிட்டு வருகிறார் எனவும் தகவல்கள் உலா வரத் தொடங்கின.

 

 

ஜெயம் ரவியுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்ட கெனிஷா உடன் ஜெயம் ரவி!
ஜெயம் ரவியுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்ட கெனிஷா உடன் ஜெயம் ரவி!

இந்த நிலையில் தான், ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் கசிந்த நிலையில், ஜெயம்ரவி மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனைவரின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார்.

அன்ஃபாலோ செய்த ஜெயம் ரவி

இந்த நிலையில், ஜெயம்ரவி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தி நியூ மீ எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதனை பலரும் விமர்சித்து வந்த நிலையில், ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராமை இத்தனை நாள் மனைவி ஆர்த்தி தான் நிர்வகித்து வந்தார் எனவும், இதனால் தான் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியின் புகைப்படங்கள் தொடர்ந்து இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் பேசி, ஜெயம்ரவி அவரது கணக்கை மீட்டெடுத்தார். அதனைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தியை அன்ஃபாலோவும் செய்தார். அதுமட்டுமின்றி ஆர்த்தி, மகன்களுடன் உள்ள புகைப்படங்களையும் நீக்கினார். மேலும், தனது மகன்களின் கஸ்டடிக்காக நீதிமன்றத்தில் குரல் கொடுப்பேன் எனவும், மூத்த மகனை வைத்து படம் எடுக்கும் ஆசை உள்ளதாகவும் ஜெயம் ரவி கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.