Jaya Prada: தலைமறைவாக இருக்கும் நடிகை ஜெயபிரதாவை கைதுசெய்ய உத்தரவு - பின்னணி என்ன?
-தேர்தல் விதிமீறல் வழக்கில் ஜெயபிரதா பல முறை நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிணையில் வராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீஸார் அவரை உடனடியாக கைதுசெய்யவேண்டும்.
தேர்தல் நன்னடத்தை விதிமீறல் வழக்கில் நடிகை ஜெயபிரதாவை உடனடியாக கைதுசெய்து ராம்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழில் விஜயகாந்துடன் ஏழை ஜாதி, கமல்ஹாசனுடன் தசாவதாரம் ஆகியப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர், நடிகை ஜெயபிரதா.
இவர் 2004ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு 85ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி.ஆனார். அதேபோல், 2009ஆம் ஆண்டு, ராம்பூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போது பிண்டி எனப்படும் பொட்டுகளை, தேர்தல் நடத்தைவிதிகளை மீறி, விநியோகத்திற்காக, தேர்தல் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டார். இருப்பினும் அந்த தேர்தலிலும் வெற்றிபெற்றார். அதன்பின், 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார், ஜெயபிரதா. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு, ராம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்விஅடைந்தார். அப்போது நன்னடத்தை விதிமீறல் தொடர்பான இரண்டு வழக்குகளில் திரைப்பட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் அதன் அடுத்தகட்டமாக, ஜெயபிரதா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.,நீதிமன்றம் பல முறை ஜெயபிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தும், ராம்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக இந்த உத்தரவைப் (சிஆர்பிசி உத்தரவு 82) பிறப்பித்தது.
இது குறித்து மூத்த அரசு தரப்பு அதிகாரி அமர்நாத் திவாரி கூறுகையில், ‘’ஜெயா மீது 2019 தேர்தல் நடத்தை விதிகள் வழக்கு ராம்பூர் சிறப்பு எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் கெம்ரி காவல் நிலையத்திலும் ஸ்வார் காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த எம்.பி., மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஷோபித் பன்சால், ஜெயபிரதா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பெயிலில் வெளிவராத வாரண்டை பிறப்பித்தார்.
ஜெயபிரதா வழக்கினை ஆராய்ந்த இன்ஸ்பெக்டர் ரஞ்சி திரிவேதி அனுப்பிய அறிக்கையில், ஜெயபிரதா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவரது மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்’’ என்றார்.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஜெயபிரதா மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 82-ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம், ஜெயபிரதாவை உடனே கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கும், அடுத்த விசாரணை தேதியான மார்ச் 6ஆம் தேதியில் அவரை ஆஜர் செய்வதை உறுதி செய்வதற்கும் ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9