தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Jamuna Death: Actress Jamuna Passed Away Due To Ill Health

Jamuna Death: நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 27, 2023 11:34 AM IST

பழம்பெரும் நடிகை ஜமுனா ஐதராபாத்தில் காலமானார்.

கோப்பு படம்
கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக மாநிலம் ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாசராவ்-கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக 30 ஆகஸ்ட் 1930ல் பிறந்தவர் ஜமுனா. இவர் சிறு வயதாக இருந்த போதே அவரது தந்தை ஆந்திர மாநிலம் தெனாலிக்கு அருகில் உள்ள துக்கிரலா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். அதனால் பள்ளி நாட்களிலேயே பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார் ஜமுனா.

பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜமுனா, தமிழ், கன்னடம், மலையாளம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மட்டும் அல்லாமல் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 1953ம் ஆண்டு வெளியான புட்டிலு என்ற தெலுங்கு படம் மூலமாக நடிகையான அறிமுகமானார். பின்னர் மிஸ்ஸம்மா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் தங்கமலை ரகசியம் , நிச்சய தாம்பூலம், குழந்தையும் தெய்வமும், நல்ல தீர்ப்பு, மருத நாட்டு வீரன், தாய் மகளுக்கு கட்டிய தாலி, மனிதன் மாறவில்லை, தூங்காதே தம்பி தூங்காதே, பூமி கல்யாணம், மிஸ்ஸம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

1980ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த ஜமுனா ராஜமுந்திரி மக்களவை தொகுதியில் 1989ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 1990 களில் பாஜகவில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையல் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறையிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point