Jailer BoxOffice: ‘டைகர் காம் ஹுக்கும்’ 5வது நாளில் சரிந்ததா ஜெயிலர் வசூல்? ஃபுல் ரிப்போர்ட் இதோ!
‘இன்று சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால், இன்றும், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. கட்டாய வெற்றியில் களமிறங்கிய இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும், வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
உலக அளவில் 350 கோடி ரூபாய் வசூலை தாண்டி, ஜெயிலர் சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரம் என்ன?
- முதல் நாள் வசூல் - 29.46 கோடி ரூபாய்
- இரண்டாம் நாள் வசூல் - 20.25 கோடி ரூபாய்
- மூன்றாம் நாள் வசூல் - 26.38 கோடி ரூபாய்
- நான்காம் நாள் வசூல் - 31.04 கோடி ரூபாய்
- ஐந்தாம் நாள் வசூல் - 15.70 கோடி ரூபாய்
- மொத்த வசூல் - 122.83 கோடி ரூபாய்
படம் வெளியான முதல் நான்கு நாட்கள் கணிசமான வசூல் இருந்த நிலையில், ஞாயிற்று கிழமையன்று, ரிலீஸ் ஆன நாளை கூட அதிக வசூலை ஜெயிலர் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பணிநாளான நேற்று திங்கட்கிழமை, பாதிக்கு பாதி குறைந்து, 15.70 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இன்று சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால், இன்றும், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் புதன் முதல் வெள்ளி வரை பணி நாட்கள் வருவதால், வசூல் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்