Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் சீசன் 8.. போட்டியாளராக மறைந்த நகைச்சுவை நடிகரின் மகன்.. யார் தெரியுமா?-it has been reported that late comedian mayilsamy son anbu is the bigg boss season 8 contestant - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் சீசன் 8.. போட்டியாளராக மறைந்த நகைச்சுவை நடிகரின் மகன்.. யார் தெரியுமா?

Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் சீசன் 8.. போட்டியாளராக மறைந்த நகைச்சுவை நடிகரின் மகன்.. யார் தெரியுமா?

Divya Sekar HT Tamil
Sep 27, 2024 10:35 AM IST

Bigg Boss Tamil Season 8 : மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில் சாமி பிக்பாஸ் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ்  சீசன் 8.. போட்டியாளராக மறைந்த நகைச்சுவை நடிகரின் மகன்.. யார் தெரியுமா?
Bigg Boss Tamil Season 8 : பிக்பாஸ் சீசன் 8.. போட்டியாளராக மறைந்த நகைச்சுவை நடிகரின் மகன்.. யார் தெரியுமா?

கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.

நடிகர் விஜய் சேதுபதி

பின்னர் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதியை சேனல் தரப்பு புதிய ஆங்கராக களமிறக்கியுள்ளது. விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் ஆலோசனை கூறுவதாக அமைந்த ப்ரமோ வீடியோ மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட் ஆனது.

விஜய் சேதுபதியின் ஆங்கரங்கில் இந்த நிகழ்ச்சி எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த நிகழ்ச்சி துவங்க உள்ள நாள் மற்றும் நேரம் குறித்து தற்போது விஜய் டிவி அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளதாக விஜய் டிவி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் எந்த மாதிரியான வித்தியாசங்கள்

இந்த சீசனில் நிகழ்ச்சி சிறப்பாகவே களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சீசனிலேயே 2 பிக் பாஸ் வீடுகள் என அடுத்தடுத்து வித்தியாசத்தை காட்டிய இந்த நிகழ்ச்சி, இந்த சீசனில் எந்த மாதிரியான வித்தியாசங்களுடன் ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் இதுதான் என தற்போது பல தகவல்கள் சமூக வலைதளத்தில் உலா வருகிறது. 

மயில்சாமி மகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில்?

அந்தவகையில் தற்போது மயில்சாமி மகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவருமான மயில்சாமி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், குணச்சித்திர நடிகர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகம் கொண்டவராக இருந்தார். காமெடியில் கலக்கிக்கொண்டிருந்த மயில்சாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி உயிரிழந்தார். தீவிர சிவபக்தரான மயில்சாமி, மஹாசிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டுவிட்டு, அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில் நடித்துள்ளார்

இவரின் மகன் அன்பு மயில்சாமி, சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் மயில்சாமிக்காகவே இவருக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற பேச்சு இப்போதே தொடங்கிவிட்டது. இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பான தகவல் விஜய் டிவி தரப்பில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.