Exclusive: ‘ஒரு ட்விட் கூட போடாத தயாரிப்பு நிறுவனம்’ லியோ சக்சஸ் மீட் பின்னணி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Exclusive: ‘ஒரு ட்விட் கூட போடாத தயாரிப்பு நிறுவனம்’ லியோ சக்சஸ் மீட் பின்னணி!

Exclusive: ‘ஒரு ட்விட் கூட போடாத தயாரிப்பு நிறுவனம்’ லியோ சக்சஸ் மீட் பின்னணி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Nov 02, 2023 10:15 AM IST

Leo Success MeetVijay: ‘யாரை காரணம் காட்டி விழா ரத்து செய்யப்பட்டதோ, அவர்களுக்காகவே விழாவை நடத்தலாம் என தடாலடியாக முடிவெடுத்தார் விஜய்’

லியோ சக்சஸ் மீட்டின் பின்னணியில் நடந்த சம்பவங்கள்
லியோ சக்சஸ் மீட்டின் பின்னணியில் நடந்த சம்பவங்கள்

அதற்கு பல காரணங்களை, பல தரப்பட்டவர்களும் முன் வைத்தனர். இருந்தாலும், அந்த பரபரப்பும் படத்திற்கு ஒரு விதமான ப்ரமோஷனாக இருந்ததை மறுக்க முடியாது. ஆடியோ வெளியீட்டு விழா சிக்கலை கடந்து, காலை சிறப்பு காட்சி ரத்து என்கிற சிக்கலையும் கடந்து ஒரு வழியாக லியோ வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. 

அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் விஜய்க்கு, லியோவை வைத்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. லியோவில் அந்த வாய்ப்பு தவறிப் போனதற்கு தயாரிப்பாளர் தரப்பும் ஒரு காரணம் என்று விஜய் நம்பினார். 

வினியோக உரிமையில் காட்டிய கறார், தியேட்டர் உரிமையாளர்களிடம் காட்டிய கண்டிப்பு, லியோ விழா ரத்தான போது ‘கூடுதல் டிக்கெட் கேட்டார்கள்’ என்று விஜய் மக்கள் இயக்கம் மீதே குறை கூறிய குற்றச்சாட்டு என தயாரிப்பாளர் லலித் மீது, மனம் வருத்தம் ஏற்படுத்தும் காரணங்கள் நிறைய இருந்தன. லியோ வசூலை மொத்தமாக அறுவடை செய்ய நினைத்த தயாரிப்பு தரப்பின் வியூகம் தான், லியோ சந்தித்த பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம் என ஆழமாக நம்பினார் விஜய். 

லலித் இல்லையென்றால் இன்னொரு தயாரிப்பாளரை விஜய்யால் அணுக முடியும். ஆனால், அவரது அடித்தளம் விஜய் மக்கள் இயக்கம் தான். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருந்தது. நெருங்கி வரும் அரசியல் பிரவேசத்திற்கு, பொதுவெளியில் இருக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்து தன் இமேஜ்ஜை தக்க வைக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருந்தது. 

அதன் வெளிப்பாடு தான், லியோ சக்சஸ் மீட் ஏற்பாடு. வழக்கமாக வெற்றி விழாக்களை தயாரிப்பு நிறுவனங்கள் தான் ஏற்பாடு செய்வார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியை விஜய் தான் ஏற்பாடு செய்துள்ளார். போலீசாருக்கு அனுமதி பெற்றது போன்ற அப்டேட்டுகளை லலித் வழங்கியிருந்தாலும், அதெல்லாம் தவிர்க்க முடியாமல் செய்த செயலாகவே தெரிகிறது. 

லியோ சக்சஸ் மீட் தொடர்பாக ஒரு பதிவை கூட எக்ஸ் தளத்தில் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்பில் வெளியிடப்பட்டவில்லை. ஒரு படத்தின் வெற்றி விழா தொடர்பாக, சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் பதிவிடவில்லை என்றால், இதை விட வேறு என்ன புரிதல் வேண்டும்? 

லியோ சக்சஸ் மீட்டில், விஜய் ரசிகர்களுக்கு பதிலாக, விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தான் அனுமதி தரப்பட்டது. இதுவும் நன்கு கவனிக்க வேண்டிய விசயம். இதே மக்கள் இயக்கத்தினரை காரணம் கூறி தான், லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புஸ்ஸி ஆனந்த் மூலம் இதுவும், விஜய் காதுகளுக்கு சென்றது. 

யாரை காரணம் காட்டி விழா ரத்து செய்யப்பட்டதோ, அவர்களுக்காகவே விழாவை நடத்தலாம் என தடாலடியாக முடிவெடுத்தார் விஜய். இது தான் லியோ வெற்றி விழா ஏற்பாட்டிற்கான காரணம். இது படத்தின் வெற்றி விழா என்று அறிவிக்கப்பட்டாலும், அடிப்படையில் அது வரவிருக்கும் தேர்தலில் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டாயமாக இருந்தது. 

விஜய் பேச்சு, உடல் மொழி எல்லாமே கொஞ்சம் மாறியிருக்கிறது. சினிமா என்று வரும் போது, தனக்கான ரசிகர்கள் போதும். அரசியல் என்று வரும் போது, அனைவரும் தேவை. சமீபத்தில் ஜெயிலர்-லியோ பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஹேட்டர்கள் அரசியலுக்கு நல்லதல்ல; அந்த புரிதல் விஜய்க்கு இருக்கிறது. அதனால் தான், ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே புரட்சி தலைவர், ஒரே கேப்டன், ஒரே தல என்று ஒட்டுமொத்த பிரபல நடிகர்களையும் ஆமோதித்து பேசினார் விஜய். இதிலும், விஜய்யின் புத்தி கூர்மை தெரிகிறது. இது லியோ வெற்றி விழா என்று கூறுவதை விட, அரசியல் வெற்றிக்கான அடித்தள விழா என்று தான் கூற வேண்டும். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.