அதிக முறை பார்க்கப்பட்ட படம்..25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! இந்திய சினிமாவை புரட்டி போட்ட படம் எது தெரியுமா?
இந்தியர்களால் அதிக முறை பார்க்கப்பட்ட படம், உலக அளவில் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை 1970களில் இந்திய சினிமாவை புரட்டி போட்ட படம் உள்ளது. ஆர்ஆர்ஆர் - பாகுபலி இணைந்து செய்திடாத சாதனையை இந்த ஒரே படம் நிகழ்த்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சினிமாவின் வெற்றியானது பாக்ஸ் ஆபிஸ் வசூலை வைத்து கணக்கிடப்படுகிறது. அதாவது படங்களுக்கு விற்பனையாகி இருக்கும் டிக்கெட்டுகளின் மூலம் அந்த படம் எத்தனை கோடிகள் பணம் சம்பாதித்துள்ளது என்பதை தொராயமாக அளவிடுகிறார்கள்.
அந்த வகையில் அதிகமாக வசூலை ஈட்டும் படம் வெற்றி பெற்ற படமாக கொண்டாடப்படுகிறது. பணவீக்கம், மாறிவரும் டிக்கெட் விலை மற்றும் மாறுபட்ட திரை எண்ணிக்கைகள் போன்ற காரணங்களால் ஒரு படத்தின் வசூலை, சினிமாக்களில் வெற்றியை முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுவது கடினமான விஷயம்தான்.
கடந்த காலங்களில் திரைப்படங்களின் வெற்றி எத்தனை நாள்கள் திரையரங்கில் ஓடுகிறது என்பதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை கணக்கிடும் டிக்கெட் விற்பனை கணக்கில், 70களில் வெளியான படம் ஒன்று தனித்துவ சாதனை புரிந்துள்ளது.
இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படம்
உலக அளவில் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட படமாக, ரமேஷ் சிப்பி இயக்கத்தில் தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், ஹேமா மாலினி, அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் உள்பட பலர் நடித்து 1975இல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான சோலே படம் உள்ளது.
ரிலீஸ் காலகட்டத்திலேயே கோடிகளில் பணம் வசூலித்த இந்த படம் ரூ. 15 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. படம் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மீண்டும் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் மூலம் கூடுதலாக ரூ. 3 கோடி வசூலை ஈட்டியது.
ஓவர்சிஸ்ஸில் கலக்கிய சோலே
சோவியத் யுனியனில் 48 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்த படம் ஒட்டு மொத்தமாக 60 மில்லியன் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஐரோப்பாவில் ஒரு கோடி, வடக்கு அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் என சேர்த்து இதுவரை 25 ஆயிரம் கோடி டிக்கெட்டுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகுபலி இரண்டாம் பாகத்தை ஒப்பிடுகையில் இந்திய சினிமா வரலாற்றில் மிக பெரிய ஹிட் என்றால் அது சோலே என கூறப்படுகிறது. ராஜமெளலியின் மற்றொரு படமான ஆர்ஆர்ஆர் உலக அளவில் அங்கீகாரம் பெற்ற போதிலும் 6 கோடி டிக்கெட்டுகளுக்கும் குறைவாக விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களான ஜவான், பதான், கல்கி 2898 ஏடி போன்ற படங்களும் 4 முதல் 5 கோடி அளவில் தான் டிக்கெட்டுகள் விற்பனையாகியிருப்பதாக கூறப்படுகிறது
சோலே பிளாப் என லேபிள் செய்யப்பட்டதன் பின்னனி
இந்த படம் வெளியான காலகட்டத்தில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்து அதிக பட்ஜெட்டில் உருவான இந்திய படம் என்ற பெருமை பெற்றது. இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்துக்கு மிக பெரிய ஓபனிங் கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், மெதுவாகவே ரசிகர்களை ஈர்த்தது. இதனால் படத்தை பிளாப் என்றே முத்திரை குத்தினார்கள்.குறிப்பாக படம் பார்த்தவர்கள் சொன்ன கருத்துகளின் மூலம் பரவி திரையரங்குக்கு பார்வையாளர்களை வரவழைத்தது.
இதன் பிறகு இந்தியாவில் அதிக வசூலை ஈட்டிய முகல்-இ-அசாம் படத்தின் வசூலை முறியடித்தது சோலே. இந்திய சினிமாவில் ஐகானிக் படமாக கடந்த 5 தசாப்தங்கள் இருந்து வருகிறது சோலே.
டாபிக்ஸ்