தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Ban 1st Odi Live Update Blog

வங்கதேச விக்கெட்டுகளை எடுத்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

IND vs BAN 1st ODI Live: இந்தியாவின் வெற்றியை பறித்த பங்களாதேஷ்!

இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. அது தொடர்பான அடுத்தடுத் அப்டேட்டுகளை இந்த பகுதிகளில் நொடிக்கு நொடி காணலாம்.

Sun, 04 Dec 202201:54 PM IST

பங்களாதேஷ் வெற்றி முழு விபரம்

Sun, 04 Dec 202201:34 PM IST

வங்கதேசத்திற்கு வெற்றி வாய்ப்பு

பங்களாதேஷ் அணி கடைசி விக்கெட்டிற்கு அதிரடி காட்டி வரும் நிலையில், 32 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் ஆடி வருகிறது. 

Sun, 04 Dec 202201:17 PM IST

47 பந்தில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி

9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, 47 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு விளையாடி வருகிறது. 

Sun, 04 Dec 202201:17 PM IST

9 விக்கெட்டை இழந்த பங்களா

40 வது ஓவரின் இரண்டாவது பந்தை சிராஜ் வீச, அது ஹசன் காலில் பட்டதும் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. வங்கதேசம் ரிவியூ செல்ல, அது நிராகரிக்கப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டது.

Sun, 04 Dec 202212:54 PM IST

ஓரே ஓவரில் இரு விக்கெட்- பங்களா 8 விக்கெட்

38 வது ஓவரில் ஷூசைன் விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் சென், அதே ஓவரின் 5 வது பந்தில் ஹிட் விக்கெட் முறையில் இபாதத் ஹூசைனை டக் அவுட் ஆக்கினார். 

Sun, 04 Dec 202212:49 PM IST

7வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம்

12 பந்தில் 6 ரன்கள் எடுத்திருந்த அபிப் உசேன், குல்தூப் சென் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்

Sun, 04 Dec 202212:34 PM IST

அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்

36வது ஓவரை வீச வந்த முகமது சிராஜ் பந்தில் முஸ்பிஹர் ரஹ்மான் போல்டானார். 18 ரன்னில் அவர் ஆட்டமிழந்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம், 128 ரன்கள் எடுத்துள்ளது. 

Sun, 04 Dec 202212:30 PM IST

5வது விக்கெட்டை இழந்த பங்களா தேஷ்

34.5 ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் வீசிய பந்தை காலில் வாங்கினார் வங்கதேச வீரர் மஹமத்துல்லா . எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்ட நிலையில் அவர் ரிவியூ சென்றார். அதில் அவுட் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வங்கதேசம் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

Sun, 04 Dec 202212:21 PM IST

100 பந்துகளில் 65 ரன்கள்

100 பந்துகளுக்கு 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு வங்கதேச அணி விளையாடி வருகிறது. 

Sun, 04 Dec 202212:12 PM IST

113 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுத்தால் வெற்றி

113 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இலக்கோடு பங்களாதேஷ் அணி விளையாடி வருகிறது. 

Sun, 04 Dec 202211:18 AM IST

மூன்று விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்

187 என்கிற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 19.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது. 

Sun, 04 Dec 202209:24 AM IST

இந்திய அணியின் முழு ஸ்கோர் விபரம்

Sun, 04 Dec 202209:23 AM IST

கே.எல்.ராகுல் மட்டும் ஆறுதல்

Sun, 04 Dec 202209:16 AM IST

இந்திய அணி ஆல் அவுட்

41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் மட்டும் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார் . பங்களாதேஷ் தரப்பில் ஷஹி அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு வீரரான ஹூசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Sun, 04 Dec 202208:48 AM IST

8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

இந்திய அணி 37 ஓவரில் 166 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும், சிராஜ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Sun, 04 Dec 202207:58 AM IST

வாஷிங்டன் சுந்தர் கேட்ச் மிஸ்

மெஹடி வீசிய 27.1 வது ஓவரில் முதல் பந்தை வாஷிங்டன்சுந்தர் தூக்கி அடித்தார். லாங்ஆனில் நின்று கொண்டிருந்த உசேன் கேட்ச் பிடித்து தவறவிட்டார். 

Sun, 04 Dec 202207:51 AM IST

தற்போதைய நிலவரம்: இந்தியா 215 ரன்கள் குவிக்க வாய்ப்பு

தற்போதைய இந்திய அணியின் ஆட்டத்தின் படி 4.30 ரன்ரேட் விகிதத்தில் 50 ஓவரில் 215 ரன்கள் எடுக்க வாய்ப்பு. ரன் விகிதம் அதிகரித்தால், ரன் குவிப்பும் அதிகரிக்கலாம். 

Sun, 04 Dec 202207:46 AM IST

25 ஓவரில் இந்தியா 105 ரன்கள்

இந்திய அணி 25 ஓவரில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 17 பந்தில் 7 ரன்களும், ராரகுல் 31 பந்தில் 21 ரன்களும் எடுத்துள்ளனர். 

Sun, 04 Dec 202207:37 AM IST

ஆதிக்கம் செலுத்தும் வங்கதேச பவுலர்கள்

மைதானத்தில் நிலவும் ஈரப்பதத்தை சாதகமாக்கி வங்கதேச பவுலர்கள் அசத்தலான பவுலிங் செய்து வருகின்றனர். 

இந்திய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பங்களாதேஷ் வீரர்கள்
இந்திய விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பங்களாதேஷ் வீரர்கள்

Sun, 04 Dec 202207:32 AM IST

5வது வீரராக வாஷிங்டன் சுந்தர் களம்

இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், 5வது வீரராக வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டுள்ளார். நியூசி., அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Sun, 04 Dec 202207:31 AM IST

ஷ்ரேயாஷ் ஐயர் அவுட்

39 பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்த ஷ்ரேயாஷ் ஐயர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. 

Sun, 04 Dec 202207:12 AM IST

இந்தியா பொறுமையான ஆட்டம்

முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த நிலையில்,  இந்திய வீரர்கள் ஷ்ரயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் பொறுமையாக ஆடி வருகின்றனர். இந்திய அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது. 

Sun, 04 Dec 202206:45 AM IST

வீரட் கோலி கேட்ச் கொடுத்து அவுட்

15 பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த வீரட் கோலி, ஷஹிப் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை எடுத்தார் ஷஹிப்

Sun, 04 Dec 202206:43 AM IST

ரோஹித் சர்மா போல்டு

10.2 வது ஓவரில் 31 பந்தில் 27 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா ஷஹிப் பந்தில் போல்டானார் .  

Sun, 04 Dec 202206:29 AM IST

சிக்ஸர் விளாசிய ரோஹித்

பொறுமையாக விளையாடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா, ஹசன் வீசிய 2.5 வது ஓவரில் ஒரு சிக்ஸ்ர் விளாசினார். இது இந்திய அணியில் முதல் சிக்ஸர் ஆகும். 

Sun, 04 Dec 202206:26 AM IST

‘பவர் ப்ளே’வை வீணடித் இந்திய அணி

இந்திய அணி வீரர்கள் பவர்பிளே என்று சொல்லும் முதல் 6 ஓவரை சரியாக பயன்படுத்தவில்லை. அவர்களை பங்களாதேஷ் பவுலர்கள் கட்டுப்படுத்தினர். இதனால் ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி, 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Sun, 04 Dec 202207:30 AM IST

வீராட் கோலி வருகை

ஷிகர் தவான் ஆட்டமிழந்ததால், வீராட் கோலி மூன்றாவது வீரராக களமிறங்கியுள்ளார்

Sun, 04 Dec 202206:24 AM IST

ஷிகர் தவான் அவுட்

ரன் எடுக்க தடுமாறி ஷிகர் தவான் 17 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த அணி 5.2 ஓவரில் 23 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. 

Sun, 04 Dec 202206:22 AM IST

ரன் எடுக்க தடுமாறும் இந்திய ஓப்பனர்கள்

இந்திய அணி 5 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ரன்கள எடுக்க தடுமாறி வருகின்றனர். 

Sun, 04 Dec 202206:17 AM IST

இந்திய அணி பொறுமையான ஆட்டம்

இந்திய அணி 4 ஓவரில் 13 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 14 பந்தில் 6 ரன்களும் , ரோஹித் சர்மா 10 பந்துகளில் 6  ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 

Sun, 04 Dec 202206:15 AM IST

மூன்று ஓவரில் பவுரை மாற்றிய வங்கதேசம்

ஹசனுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மெஹிடியை நான்காவது ஓவர் வீச அழைத்துள்ளது பங்களாதேஷ்

Sun, 04 Dec 202206:13 AM IST

3 ஓவரில் இந்தியா 12 ரன்கள்

ரோஹித் சர்மா 7 பந்தில் 6 ரன்களும், ஷிகர் தவான் 11 பந்தில் 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 

Sun, 04 Dec 202206:05 AM IST

முதல் ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுத்த இந்தியா

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முஸ்தஃபிர் வீசிய முதல் ஓவரில் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது

Sun, 04 Dec 202206:04 AM IST

கே.எல்.ராகுலுக்கு கூடுதல் பொறுப்பு

இன்றைய போட்டியில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், துணை கேப்டன் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் பணியை கூடுதலாக கவனிப்பார்

Sun, 04 Dec 202206:02 AM IST

பங்களாதேஷ் அணியின் இன்றைய அணி விபரம்

Sun, 04 Dec 202206:00 AM IST

ரிஷப் பண்ட் திடீர் நீக்கம்

பிசிசிஐ மருத்துவக் குழுவின் ஆலோசனையில், ரிஷப் பந்த் ஒருநாள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார். அவருக்கு மாற்று வீரர் தேவைப்படவில்லை. முதல் ஒருநாள் போட்டிக்கான தேர்வில் அக்சர் படேல் தேர்வு செய்யப்படவில்லை.

Sun, 04 Dec 202205:57 AM IST

இந்திய அணி பேட்டிங் தொடக்கம்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். 

Sun, 04 Dec 202205:56 AM IST

இந்திய அணியின் 11 வீரர்கள் விபரம்

Sun, 04 Dec 202205:56 AM IST

குல்தீப் சென்னுக்கு இந்திய அணி தொப்பி

இந்திய அணியில் இன்று அறிமுக வீரராக களமிறங்கும் குல்தீன் சென்னுக்கு இந்திய அணியின் நீல நிற தொப்பியை கேப்டன் ரோஹித் சர்மா வழங்கினார். 

Sun, 04 Dec 202205:50 AM IST

பங்களாதேஷ் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிபேட்டிங் செய்ய உள்ளது. 

டாஸ்வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச முன்வந்துள்ளது
டாஸ்வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச முன்வந்துள்ளது

Sun, 04 Dec 202205:47 AM IST

இந்தியா-வங்கதேசம் ஒரு நாள் போட்டிகள் விபரம்

வங்கதேசம் அணியுடன் இந்தியா அணி  விளையாடும் மூன்று ஒரு நாள் போட்டியின் முழு விபரம்
வங்கதேசம் அணியுடன் இந்தியா அணி விளையாடும் மூன்று ஒரு நாள் போட்டியின் முழு விபரம்

Sun, 04 Dec 202205:45 AM IST

‘போட்டி சவாலாகவே இருக்கும்’

வங்கதேசம் உடனான இன்றை போட்டி தங்களுக்கு சவாலாகவே இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

Sun, 04 Dec 202205:39 AM IST

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. 

போட்டிக்கான கோப்பையுடன் வங்கதேச கேப்டன் மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா

கோப்பை அறிமுக விழாவில் இரு அணியின் கேப்டன்கள்
கோப்பை அறிமுக விழாவில் இரு அணியின் கேப்டன்கள்