Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக்கொள்கிறேன் - நடிகை காவ்யா மாதவன்-i take the good and bad things that happen in my life as experiences as actress kavya madhavan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக்கொள்கிறேன் - நடிகை காவ்யா மாதவன்

Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக்கொள்கிறேன் - நடிகை காவ்யா மாதவன்

Marimuthu M HT Tamil
Sep 19, 2024 08:41 AM IST

Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக் கொள்கிறேன் என நடிகை காவ்யா மாதவன் பேட்டியளித்துள்ளார். இன்று அவரது பிறந்தநாளில், பல ஆண்டுகளுக்கு முன் காவ்யா மாதவன் அளித்த பேட்டி இங்கே மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக  எடுத்துக்கொள்கிறேன் - நடிகை காவ்யா மாதவன்
Kavya Madhavan: என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக எடுத்துக்கொள்கிறேன் - நடிகை காவ்யா மாதவன்

1991ஆம் ஆண்டு, முதன்முதலாக ’பூக்காலம் வரவாயி’ என்னும் மலையாளப் படத்தில் நடித்த காவ்யா மாதவன், முதன்முறையாக கதாநாயகியாக உருவெடுத்தது, ‘சந்திரடிக்குன்னா திகில்’ என்னும் மலையாளப் படத்தில் தான். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் முதன்முறையாக நடிகர் திலீப்புடன் ஜோடியாக நடித்த இந்த ஜோடி, பல்வேறு படங்களில் பலரும் ரசிக்கும் ஜோடியாக மாறி, இறுதியில் வாழ்விலும் இணைந்தது.

காவ்யா மாதவனின் திருமண வாழ்வு:

காவ்யா வீட்டில் பெரியோர்களின் விருப்பத்தின்படி, நிஷால் சந்திரா என்னும் நபரை பிப்ரவரி 9ஆம் தேதி 2009-ல் மணந்தார். பின் குவைத்துக்கு சென்ற இந்த திருமண ஜோடி, திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரிந்தது. அதே ஆண்டு ஜூன் மாதம் வீடு திரும்பிய காவ்யா, 2011ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மனம் ஒத்து பிரிந்தனர். அதன்பின், லக்‌ஷயா என்ற ஜவுளிக்கடையைத் தொடங்கிய காவ்யா, அவ்வப்போது சில படங்களிலும் தொழில் துறையிலும் என இரட்டை சவாரி செய்தார்.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகரான திலீப்பும் மஞ்சு வாரியருடன் 2015ஆம் ஆண்டு இருவரும் மனமொத்து திருமண உறவில் இருந்து வெளியேறினர். பின் நடிகர் திலீப்பும் காவ்யா மாதவனும் 2016ல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு மகாலட்சுமி என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

பல இடங்களில் நான் நிரபராதியாக இருந்திருக்கிறேன்: நடிகை காவ்யா மாதவன்!

நடிகை காவ்யா மாதவன் டிவி நியூ லைவ்க்கு அக்டோபர் 21ஆம் தேதி, 2015ஆம் ஆண்டு அளித்த பேட்டியில், ‘’2002ஆம் ஆண்டு பயங்கர பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன். நான் நடித்த மீசை மாதவன் படம் ரிலீஸானபோது, அது பல குடும்பத்தினரை தியேட்டருக்குள் அழைத்து வந்தது. படப்பிடிப்பு முடிந்து திரும்பிவரும்போது படப்பிடிப்பு நடத்தப்பட்ட கிராம மக்கள் பலாப்பழம், தேங்காய் உள்ளிட்டப் பழங்களை அன்புமிகுதியால் என்னிடம் கொடுத்துவிடுவார்கள்.

அப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிளாஸ்மேட்ஸ் படத்துக்கும் இருந்தது. கிளாஸ்மேட்ஸ் படத்தை படம் வெளியாகி 50ஆவது நாளில் போய் பார்க்கிறேன். அது கவிதை மாதிரி ஒரு படம். அதற்காக பழைய மாணவர்களாக நடிக்கும்போது, அந்த வருஷத்தில் பயன்படுத்திய உடைகளை தேர்வு செய்து உடுத்தி நடித்தேன். படத்தைப் பார்த்து நிறையபேர், பல தங்கள் வாழ்வில் நடந்ததாகத் தெரிவித்தனர்.

என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்து படிப்பில் எப்போதும் நீ முதலில் வரவேண்டும் என்று சொல்லவில்லை. நீ படித்த விஷயங்களை அழகாக சிரித்து தேர்வில் எழுதவேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார். அதை சின்ன வயது முதல் கேட்டு கேட்டு, நமக்கு கிடைக்கிறது கிடைக்கும் என நினைப்பு வந்துவிட்டது. எத்தனையோ சினிமாவில் பிறர் செய்யவேண்டிய சினிமாக்கள், எனக்கு கிடைத்திருக்கிறது. ஜெய்ப்பூரில் தயாரித்த பொருட்கள் என் கைவசம் வந்து சேர்கிறது. அதற்கும் எனக்கும் என்ன தொடர்பு.

பல இடங்களில் நான் நிரபராதியாக இருந்திருக்கிறேன். ஆனால், என் மீது சிலர் குற்றம்சாட்டும்போது, அதைப் பலர் நம்பவும் செய்கின்றனர். இப்போது அதை நான் கண்டுகொள்ளாமல்விட்டுவிடுகிறேன். பலரும் நல்லதைப் படிக்கணும். கெட்டதைப் படிக்கக்கூடாது எனச் சொல்வார்கள். எனக்கு அப்படியில்லை. என் வாழ்வில் நடந்த நல்லதையும் கெட்டதையும் அனுபவங்களாக நான் எடுத்துக்கொள்கிறேன்.’’ எனக் கூறியிருக்கிறார், நடிகை காவ்யா மாதவன்.

நன்றி: டிவி நியூ லைவ்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.