TAMIL DEBUT DIRECTORS: டாக்ஸிக் காதல்..உறவுக்கு இடையிலான சுதந்திரம்! உணர்வுகளுக்கு மதிப்பு - லவ்வர் இயக்குநர் ஷேரிங்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Debut Directors: டாக்ஸிக் காதல்..உறவுக்கு இடையிலான சுதந்திரம்! உணர்வுகளுக்கு மதிப்பு - லவ்வர் இயக்குநர் ஷேரிங்

TAMIL DEBUT DIRECTORS: டாக்ஸிக் காதல்..உறவுக்கு இடையிலான சுதந்திரம்! உணர்வுகளுக்கு மதிப்பு - லவ்வர் இயக்குநர் ஷேரிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 11:39 AM IST

Tamil Debut Director Lover Prabhuram Vyas: டாக்ஸிக் காதல், உறவுக்கு இடையிலான சுதந்திரம், உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது என முழுக்க ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் பிரச்னை, சிக்கல்களை வைத்து லவ்வர் படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் கவனம் ஈர்த்துள்ளார்.

Tamil Debut Director Lover Prabhuram Vyas: டாக்ஸிக் காதல்..உறவுக்கு இடையிலான சுதந்திரம்! உணர்வுகளுக்கு மதிப்பு - லவ்வர் இயக்குநர் ஷேரிங்
Tamil Debut Director Lover Prabhuram Vyas: டாக்ஸிக் காதல்..உறவுக்கு இடையிலான சுதந்திரம்! உணர்வுகளுக்கு மதிப்பு - லவ்வர் இயக்குநர் ஷேரிங்

அந்த வகையில், 1978இல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா இணைந்து நடித்து ருத்ரய்யா இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் படம் இருந்தது. பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட படமாக இந்த படம் இன்று வரையிலும் பேசப்படும் படமாக உள்ளது.

அதேபோன்று ஆண், பெண் ஆகியோரின் பார்வையில் காதல் உறவு எப்படி உள்ளது என்பதை பற்றி இந்த காலத்துக்கு ஏற்றார் போல் பேசிய படமாக லவ்வர் உள்ளது.

யூடியூப்பில் பிரபலமான லிவ் இன் என்ற ரிலேஷன்ஷிப் தொடர் மூலம் பிரபலமானவர் பிரபுராம் வியாஸ். மொத்தம் 13 எபிடோடுகளை கொண்ட இந்த வெப்சீரிஸ் 2017இல் வெளியாகி பேமஸ் ஆனது. இவர் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் லவ்வர் படத்தில் மணிகண்டன், தெலுங்கு நடிகையான ஸ்ரீகெளரி பிரியா ரெட்டி இணைந்து நடித்திருப்பார்கள். மற்ற நடிகர்கள் எல்லாம் சமீபத்திய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக தோன்றி கவனிக்கத்தக்க வளரும் நடிகர், நடிகைகளாக இருப்பவர்கள் தான்.

டாக்ஸிக் காதல்

காதலில் விட்டுக்கொடுப்பது, சகிப்புதன்மை என்பதை பற்றி கூறிய காலம் போய் தற்போது புரிதல் பற்றி பேசும் விதமாக கதைகள வர தொடங்கியுள்ளன. இந்த விஷயத்தை பற்றி காட்சிகளாகும், உணர்வுகளாலும் வெளிப்படுத்தும் விதமான படத்தின் திரைக்கதை தமிழ் சினிமாவில் வித்தியாச முயற்சியாகவே அமைந்துள்ளது.

இந்த படத்துக்கு கதை இதுதான் என்று அருதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் உறவுகளுக்கு இடையே ஏற்படும் முரண், உறவகளின் சுதந்திரத்தை தீர்மானப்பது பற்றி அதிகமாக பேசிய விதத்தில், காதல் என்ற பெயர் வெளிப்படுத்தும் இந்த ஆக்கிரமிப்புகளை டாக்ஸிக் காதல் என்ற பெயரில் வர்ணித்துள்ளனர்.

இந்த படத்தின் வெளியீட்டுக்கு பின்னர் பிரபல ஊடகத்துக்கு இயக்குநர் பிரபுராம் வியாஸ் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

"செல்வராகவன் படங்கள் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இயக்குநராக இருப்பதை விட எழுத்தாளராக இருப்பதில் அதிக நம்பிக்கை கிடைக்கிறது. அமீர் சாரின் எழுத்துகள் மிகவும ரசிக்கிறேன். பருத்திவீரன் என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் கோட் என்பேன்.

பிரேக் அப், பேட்ச் அப் கடல் அலை போன்றது

கடல் படத்தின் மிக பெரிய குறியீடாகவே வைத்திருப்பேன். படத்தில் பிரேக் அப், பேட்ச் அப் என மாறி மாறி நடக்கும். கடலில் அலை வந்து வந்து செல்வது போல் உணர்த்தும் விதமாக இது இருக்கும்.

ரசிகர்களின் சுவை என்பது மாறுபட்டதாக இருக்கும். ஒரு கதை என்பது அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையாதாகவோ அல்லது அவர்களை வேறு இடத்துக்கு அழைத்து சென்று சிரிக்க, ரசிக்க வைப்பதாக இருக்க வேண்டும். இதை செய்தால் அவர்களுக்கு பிடித்துவிடும். லாஜிக் விஷயங்கள் பற்றி தற்போது அவர்கள் தெளிவாக இருப்பதால் அந்த மாதிர குறைபாடுகள் இருக்க கூடாது.

மனித உறவுகள் பற்றி பேசும் படங்கள் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. வெளிப்படையாக பேச தயங்கும் விஷயங்களை திரையில் காட்டும்போது ஆடியன்ஸ் கனெக்ட் ஆவார்கள்.

ரிலேஷன்ஷிப்பில் பலருக்கும் பெரிய பிரச்னை இருக்கிறது. அதை நண்பர்களுடன் கூட வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டி கொள்கிறார்கள். பெஷசிவ், பார்ட்னர் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது நார்மலான விஷயமாக மாறியிருக்கும் இந்த சூழிலில் இதுபோன்ற படங்கள் தேவை என முடிவெடுத்து லவ்வர் கதையை முதல் படமாக தேர்வு செய்தேன்.

ரிலேஷன்சிப் என்றால் என்ன?

தனிமையா இந்த வாழ்க்கையை கடந்து விடலாம். ஆனாலும் தனிமைக்கு மருந்தாகத்தான ரிலேஷன்ஷிப் உள்ளது. வாழ்க்கைய ஷேர் செய்ய கிடைக்கும் ரிலேஷன்ஷிப்பில் முரண்கள் கண்டிப்பாக இருக்கும்.

இதற்காகவே காதல் என்பது யுத்தம் போன்ற என்கிற மேற்கொள் போட்டிருப்பேன். நீங்கள் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் உறவில் சண்டை இல்லாமல் இருக்காது. சில சமயங்கள் கோபத்தை வெளிப்படுத்துவோம், சில சமயங்கள் கோபத்தை அனுமதிப்போம். எனவே உறவின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பதன் மூலம் அவை சிறப்பாக இருக்கும்.

டாக்ஸிக் காதலின் பரிணாமங்களாக தான் படத்தை உருவாக்கியிருந்தேன். அதை பற்றி விவாதித்தும், எப்படி உடைக்கலாம் என்பதை பற்றிதான் பேசியிருந்தோம். உறவுக்குள் இந்த சிக்கல் எப்படி ஏற்படுகிறது என்பதை காட்ட முயற்சித்திருந்தோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்" என்றார்.

காதலர் தினம் ஸ்பெஷலாக பிப்ரவரி 9ஆம் தேதி லவ்வர் படம் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களுடன் ரசிகர்கள் மத்தியில் பாராட்டையும் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.